இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தனித்தனியாக ஜோடியாகவும் பல சாதனைகளைப் படைத்து அசத்ததிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. தற்போது இந்த தொடரின் முதல் போட்டி ஜார்கண்ட் ரான்சி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அதிரடியில் மிரட்டினார்கள். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 48 பந்துகளில் அரை சதத்தையும், ரோகித் சர்மா 43 பந்துகளில் அரைசதத்தையும் அடித்து தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜோடி 100 ரன்கள் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது.
மேலும் இந்திய மண்ணில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரராக விராட் கோலியும், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரராக ரோஹித் சர்மாவும், சர்வதேச போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய ஜோடியாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவும் சாதனை படைத்திருக்கிறார்கள்.
சொந்த மண்ணில் அதிக ஒருநாள் 50+ ஸ்கோர்கள்:
59 – விராட் கோலி (இந்தியாவில்)
58 – சச்சின் டெண்டுல்கர் (இந்தியாவில்)
46- ஜாக் டியர் (தென் ஆப்பிரிக்காவில்)
45- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியாவில்)
37 – ரோஹித் சர்மா (இந்தியாவில்)*
37- கே சங்கக்காரா (இலங்கையில்)
ODI வடிவத்தில் அதிக சிக்ஸர்கள்:
352 – ரோஹித் சர்மா (269)
351 – ஷாஹித் அப்ரிடி (369)
331 கிறிஸ் கெய்ல் (294)
270 – சனத் ஜெயசூர்யா (433)
229 – எம்.எஸ். தோனி (297)
220 – ஜான் மோர்கன் (230)
204 – ஏபி டெவிலியர்ஸ் (218)
அதிக சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடியவை (இந்திய ஜோடிகள்)
392- கோலி/ரோஹித்
391 சச்சின்/திராவிட்
369 – டிராவிட்/கங்குலி
367 சச்சின்/கும்பளே
341 – சச்சின்/கங்குலி
310 – கோஹ்லி/ஜடேஜா
292- சச்சின்/அசார்
285-கோலி/தோனி