விராட் கோலி நாதன் லயனுக்கு எதிரா இதை செஞ்சே ஆகணும் இல்லனா கஷ்டம்தான் – ஆர்சிபி கோச் அதிரடி!

0
419
Viratkohli

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாக்பூர் மைதானத்தில் இந்தியாவை ஒன்பதாம் தேதி சந்திக்கிறது!

நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இந்த டெஸ்ட் தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணி இருப்பதற்கு மிக முக்கியமான தொடராகும்!

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி தற்பொழுது பெங்களூரில் தங்களது பயிற்சி முகாமை அமைத்து பயிற்சி செய்து வருகிறது. ஆஸ்திரேலியா அணியில் இந்த இந்திய சுற்றுப்பயணத்துக்கு நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதில் நாதன் லயன் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக அந்த அணிக்கு இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் வைத்து இவர் விராட் கோலிக்கு சில ஆட்டங்களில் சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார்.

இது கருத்தில் கொண்டு ஐபிஎல் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசுகையில் ” விராட் கோலி இரண்டு விஷயங்களை செய்யாததால் அவர் நாதன் லயனுக்கு எதிராக சிரமங்களை சந்திக்கிறார். ஒன்று அவர் இறங்கி போய் விளையாடுவதில்லை அடுத்து அவர் ஸ்வீப் விளையாடுவதில்லை. அப்படியானால் அவர் நாதன் லயனுக்கு எதிராக எங்கே ரண்களைக் கொண்டு வர முடியும்? எனவே அவர் தனது அணுகுமுறையை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். சமீபத்தில் விராட் கோலி தனது கால்களை பயன்படுத்தி அதிகமாக விளையாடியதை பார்த்திருப்போம். அவர் அதை வெள்ளைப்பந்து போட்டிகளில் செய்தார் அதையே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிவப்பு பந்திலும் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” விராட் கோலி கொஞ்சம் ஆப் ஸ்டெம்ப் கார்டு எடுத்து விளையாட வேண்டும். இதனால் அவர் நாதன் லயனின் லைனை நன்றாக மறைக்க முடியும். மேலும் அவர் அவரை அதிகம் பந்து வீச விடக் கூடாது. ஆக்ரோஷமான பேட்டிங் முறையை கையில் எடுத்து அவரை கொஞ்சம் அச்சுறுத்தலாம். மேலும் இடதுகை வேகபந்துவீச்சாளர் ஸ்டார்க் உருவாக்கும் வுட் மார்க்கை வைத்து நாதன் லயன் இந்திய வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் தரலாம்” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -