வீடியோ6,4,6,6,4.. மேக்ஸ்வெல்லை வச்சு செய்த ருதுராஜ்.. மோசமான சாதனை.. பட்டைய கிளப்பிய இந்தியா!

0
5573
Ruturaj

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது.

போட்டிக்கான இடத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் பனிப்பொழிவு இல்லாதது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. மேலும் பந்து நன்றாக ஸ்விங் ஆனது.

- Advertisement -

இந்த நிலையில் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால், ஐந்து பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் இஷான் கிஷான் இருவரும் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ருத்ராஜ் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அணியை மீட்க ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சூரியகுமார் யாதவ் 21 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்குப் பிறகு ருதுராஜ் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்து, பின்பு மெல்ல மெல்ல அதிரடியை கூட்டினார்கள். குறிப்பாக ருதுராஜ் அதிரடியில் ஈடுபட்டார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய ருதுராஜ் முதலில் 32 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதற்கு அடுத்து மேலும் தனது பேட்டிங்கில் தீவிரத்தை அதிகப்படுத்தினார். தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவின் எல்லா பந்துவீச்சாளர்களையும் நொறுக்கி தள்ளினார்.

இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர்கள் எடுபடாத காரணத்தினால் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் வித்தியாசமாக சுழற் பந்துவீச்சாளர் மேக்ஸ்வெல்லை கடைசி ஓவருக்கு கொண்டு வந்தார். இதற்கான தண்டனை அவருக்கு உடனே கிடைத்தது.

19ஆவது ஓவரில் 95 ரன்கள் உடன் களத்தில் நின்ற ருதுராஜ் மேக்ஸ்வெல் ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி தனது முதல் சர்வதேச டி20 சதத்தை நிறைவு செய்தார். மேலும் அதே ஓவரில் மேலும் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார். அந்த ஓவரில் மேலும் ஒரு நோபால் மற்றும் ஒரு வைட், இரண்டு சிங்கிள்கள் வந்தது.

மேக்ஸ்வெல் கடைசி ஓவரில் ஒட்டுமொத்தமாக 30 ரன்கள் விட்டுத் தந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு அதிக ரன்கள் தந்த ஆஸ்திரேலியா வீரர் என்கின்ற மோசமான சாதனையை படைத்தார்.

இறுதி வரை களத்தில் நின்ற ருதுராஜ் 57 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் இந்திய அணி 20 ஓவர்களில் 222 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று முறை 200 ரன்கள் தாண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!