வீடியோ.. கோலி செய்த காரியம்.. நெகிழ்ந்து போன நவீன்.. நொடியில் மைதானத்தில் நிலைமை மாறிப்போன சுவாரசியம்!

0
1565
Virat

இன்று இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் உலகக் கோப்பை தொடரில் மோதியது. இந்தப் போட்டிக்கு மட்டும் ரசிகர்களிடம் ஒரு தனி எதிர்பார்ப்பு இருந்தது!

காரணம் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் விளையாடுகிறார் என்பதுதான் எதிர்பார்ப்புக்கான முக்கிய காரணம்.

- Advertisement -

நடந்து முடிந்த இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய நவீன் உல் ஹக்குக்கும் விராட் கோலிக்கும் லக்னோவில் நடைபெற்ற ஒரு போட்டியில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் வீரர்கள் இறுதியாக கைகுலுக்கும் போது அது உச்சநிலையை அடைந்தது. அப்பொழுது லக்னோ அணியின் மெண்டர் கம்பீர் தலையிட பிரச்சனை இன்னும் சூடு பிடித்தது.

ஐசிசி அமைப்பு இந்த இரண்டு வீரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அபராதம் விதித்தது. அதற்குப் பிறகும் சில போட்டிகளில் இன்ஸ்டாகிராம் மூலம் இவர்களது பிரச்சனை தொடர்ந்து வந்தது. நவீன் உல் ஹக் விளையாடும் போட்டிகளில் விராட் கோலி ரசிகர்கள் அவரை கேலி செய்து வந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இஷான் கிஷான் ஆட்டம் இழந்து விராட் கோலி உள்ளே வரும்பொழுது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது. மேலும் விராட் கோலி வந்ததும் நவீன் உல் ஹக்கை அழைத்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ஓவர் கொடுத்ததும், ஆரவாரம் அதிகமானது.

மேலும் எல்லையில் பில்டிங் செய்த நவீன் உல் ஹக்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர். அப்போது களத்தில் இருந்த விராட் கோலி இந்திய ரசிகர்களை பார்த்து அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இதைப் பார்த்த நவீன் உல் ஹக் பழைய பிரச்சினைகளை எல்லாம் மறந்து வந்து விராட் கோலி இடம் பேச, இருவரும் ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து, சிரித்தவாறு தங்களுடைய ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பை காட்டி களத்தில் அற்புதமான உதாரணமாக இருந்தார்கள். அன்று நடைபெற்ற விஷயத்திற்கு இன்று மிகச் சிறப்பான முறையில் தீர்வு காணப்பட்டு இருக்கிறது!