வீடியோ:தரமான சம்பவத்திற்கு தயாராகும் விராட் கோலி

0
96

16 வது ஐபிஎல் தொடர் 31ஆம் தேதி துவங்கிய நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் குஜராத் பஞ்சாப் மற்றும் லக்னாணிகள் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடைபெறுகின்ற முதல் போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளும் இரண்டாவதாக நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளும் மோத உள்ளன .

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்தவரை தொடர்ச்சியாக இரண்டு சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ஆனால் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதுவரை மூன்று முறை எழுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த முறை நிச்சயமாக கோப்பையை வெல்வோம் என்ற உறுதியுடன் ஆர்சிபி அணி களம் இறங்கி இருக்கிறது. இவர்கள் தனது முதல் போட்டியிலேயே ஐபிஎல் ஜாம்பவான் மற்றும் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கின்றன.

பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கிறது . கடந்த இரண்டு மூன்று தொடர்களாக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டாப் ஃபார்மில் இல்லை. கடந்த வருடம் அவர் 341 ரன்கள் குவித்திருந்தார். இந்த வருட ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக ஐபிஎல் வரலாற்றிலேயே என்னுடைய சிறப்பான விளையாட்டை இந்த வருடம் வழங்குவேன் என கூறியிருந்தார் . ஐபிஎல் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனை விராட் கோலி வசமே உள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது 973 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் மொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலியின் வசமே உள்ளது. 216 ஐபிஎல் போட்டிகளில் ஆடி உள்ள விராட் கோலி 6144 ரகளை குறித்து இருக்கிறார் . இதில் 5 சதங்களும் 42 அரை சதங்களும் அடங்கும். மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் விராட் கோலி. அவரது ஒவ்வொரு டிரைவுகளும் இடி போல இருக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் அவரது பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறது . அது இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வீடியோ