தற்பொழுது பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா பந்து வீசும் என அறிவித்தார். ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் விளையாடாத நிலையில், கில் சிவம் துபே விளையாடும் வாய்ப்பை பெற்றார்கள்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 23, இப்ராகிம் ஜட்ரன் 28 என ஓரளவுக்கு தாக்கு பிடித்து துவக்கம் தந்தார்கள்.
இதற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஓமர்சாய் 29, முகமது நபி 42, கடைசி கட்டத்தில் நஜீபுல் ஜட்ரன் 19 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில், ஆப்கானிஸ்தான அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் நான்கு ஓவர்கள், 23 ரன்கள், இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். முகேஷ் குமார் 4 ஓவர்கள், 33 ரன்கள், இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து இந்திய அணிக்கு துவக்கம் தருவதற்கு சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களத்திற்கு வந்தார்கள். முதல் ஓவரை சந்தித்த ரோகித் சர்மா பரூக்கி வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை நேராக அடித்து ரன்னுக்கு ஓடி வந்தார்.
இந்த நேரத்தில் ரோஹித் சர்மாவை பார்க்க வேண்டிய கில் திரும்பி பந்தை ஃபீல்டர் பிடிக்கிறாரா என்று வேடிக்கை பார்த்தார். இதற்குள் பந்துவீச்சு முனைக்கு ரோகித் சர்மா ஓடி வந்து விட்டார். தந்தை பிடித்த இப்ராஹிம் ஜட்ரன் நேராக கீப்பருக்கு அடிக்க, ரோஹித் சர்மா ஆறு வருடங்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.
ஜெய்வாலுக்கு பதிலாக கேப்டன் ரோஹித் சர்மா கில்லுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அவரோ ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வாங்கி விட்டார். வெளியேறும் பொழுது ரோகித் சர்மா மிகக் கடுமையான கோபத்துடன் கில்லிடம் தவறைச் சுட்டிக்காட்டி வெளியேறினார்.
Rohit gone for duck 😭#RohitSharma #Gill #IndvsAfg #INDvAFG pic.twitter.com/xpSGnreCm5
— Shubham Chand (@shubhamchand768) January 11, 2024