வீடியோ.. கழண்டு விழுந்த ஷூ.. வார்னர் பரிதாப அவுட்.. கிரிக்கெட்டில் வினோத சம்பவம்..!

0
607
Warner

தற்பொழுது தென் ஆப்பிரிக்க மண்ணில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் வென்று இருந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி அதிரடியாக திரும்பி வந்து வெற்றி பெற்று தற்போது தொடரிலும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போட்டி ஒரு ஹை கோரிங் போட்டியாக அமைந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரது அதிரடி அரை சதங்களாலும், எய்டன் மார்க்ரம் உடைய அதிரடி சதத்தாலும் ஆறு விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு மூத்த துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அதிரடியான துவக்கத்தை தந்தார். அவருடைய ஆட்டத்தை பார்க்கும் பொழுது பழைய டேவிட் வார்னர் ஆட்டத்தை பார்ப்பது போல இருந்தது. மேலும் இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் நூறு ரன்களைத் தாண்டி, 140 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்த பொழுது, இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரை கைப்பற்றி விடும் என்றே பலரும் நினைத்து இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் இதற்குப் பிறகு எல்லாம் அப்படியே தலைகீழாக மாறி, ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 111 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்தப் போட்டியில் மிக அதிரடியான துவக்கம் தந்த டேவிட் வார்னர், சுழற் பந்துவீச்சில் பந்தைத் தட்டி ரன் எடுக்க முயற்சி செய்தபொழுது, வழுக்கி கிரீசில் விழுந்துவிட்டார். இந்த நேரத்தில் லபுசேன் ஓடி வர, சுதாரித்த டேவிட் வார்னர் எழுந்து ஓடி வந்தார். அதற்குள் பந்தை பிடித்த கேசவ் மகாராஜ் ஸ்டெம்ப்பை நோக்கி அடிக்க, வார்னர் பெரிய டைவ் அடித்தும், அதற்கான பலன் இல்லாமல், 56 பந்தில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 78 ரண்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இவர் ஆட்டம் இழந்தது ஆஸ்திரேலியா அணியின் வெற்றியை பெரிதும் பாதித்ததாக அமைந்தது. டேவிட் வார்னர் அந்த குறிப்பிட்ட பந்தை விளையாடும் பொழுது, அவருடைய ஷூ வழுக்கி அவரது காலில் இருந்து கழண்டு விட்டது. இதன் காரணமாகவே அவர் கீழே விழுந்து, மேற்கொண்டு ஓடி ரன் அவுட்டும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது!