வீடியோ.. பும்ராவின் குழந்தைக்கு பரிசளித்த ஷாகின் அப்ரிடி.. நெகிழ்ந்த ரசிகர்கள்.. வைரலாகும் செயல்!

0
14365
Shaheen

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றால், களத்திற்கு வெளியே மட்டுமல்ல களத்திற்கு உள்ளேயும் பெரிய வெப்பம் அடிக்கும். இதனால் வரையில் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது!

ஆனால் தற்போது இப்படியான நிலைமைகள் எல்லாம் களத்திற்குள் மாறி இருக்கிறது. வீரர்கள் பெரிதான வார்த்தை போர்களில் எதுவும் ஈடுபடுவது கிடையாது. மேலும் களத்திற்குள் மிகுந்த நட்போடு காணப்படுகிறார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் மூத்த மற்றும் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளின் போது அந்த அணியின் வீரர்களுடன் நல்ல நட்பை காட்டுகிறார்கள். அவர்கள் தரப்பில் இருந்தும் அதே மாதிரியான நட்புணர்வு வெளியே வருகிறது.

மிகக்குறிப்பாக விராட் கோலி இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார். அவர் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணியுடன் விளையாட வாய்ப்பு அமையும் பொழுது, போட்டியின் முடிவுகள் எப்படி இருந்தாலும், பாகிஸ்தான அணியின் வீரர்களுடன் நல்ல நட்பை கொண்டு இருக்கிறார்.

விராட் கோலியிடம் ஆரம்ப காலக்கட்டத்தில் தேடி வந்து பாபர் அசாம் பேசி, சில ஆலோசனைகளை பெற்று சென்றதை அவரே கூறியிருந்தார். அதே சமயத்தில் விராட் கோலி கொஞ்சம் பேட்டிங் சரிவில் இருந்த பொழுது, எல்லாம் மாறிவிடும் வலிமையாக இருங்கள் என்று அவருக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

- Advertisement -

விராட் கோலி தற்பொழுது கூட எந்தவித ஈகோவும் இல்லாமல் பாபர் அசாமை தற்காலத்தின் எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணியின் வீரர்களின் நட்புக்கு மேலும் வலிமை சேர்க்கும் விதமாக, ஒரு அற்புதமான நிகழ்வு பும்ரா மற்றும் ஷாகின் அப்ரிடிக்கு இடையே நிகழ்ந்திருக்கிறது. இதற்கான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு இருக்கிறது.

நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக மனைவிக்கு குழந்தை பிறக்க இருந்த காரணத்தினால் பும்ரா நாடு திரும்பி இருந்தார். ஆண் குழந்தை பிறந்தது. தற்பொழுது பும்ரா அதைப் பார்த்து முடித்து, இலங்கை திரும்பி வந்த பிறகு, ஷாகின் ஷா அப்ரிடி பிறந்த குழந்தைக்கு தன்னுடைய வாழ்த்தையும் பரிசையும் பும்ராவிடம் வழங்கினார். இந்த நிகழ்வு மிகவும் அற்புதமான ஒன்றாக அமைந்திருக்கிறது!