வீடியோ; அதிரடி அரை சதம் அடித்து பேட்டிங்கிலும் கலக்கிய ஷாகின் சா அப்ரிடி!

0
815
PSL

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்நாட்டில் நடத்தும் டி20 லீக் பி எஸ் எல் லீக்கின் ஏழாவது எடிசன் தற்பொழுது நடந்து வருகிறது. ஆறு அணிகளை கொண்டு நடத்தப்படும் பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் இரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. பெசாவர் சல்மி, கியோட்டோ கிளாடியேட்டர்ஸ், கராச்சி கிங்ஸ் அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன!

தற்பொழுது நடந்து வரும் பிஎஸ்எல் தொடரில் இன்று மதியம் ஷாகின் ஷா அப்ரிடி கேப்டனாக இருக்கும் கியோட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும், பாபர் ஆஸம் கேப்டனாக இருக்கும் பெஷாவர் சல்மி அணியும் மோதின. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பெசாவர் அணி முதலில் பேட்டிங் செய்வதென தீர்மானித்தது.

- Advertisement -

இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் பாபர் மற்றும் சைம் அயூப் இருவரும் பெசாவர் அணிக்கு அற்புதமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்கள். இதில் இளம் வீரர் அயூப் உடைய ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 36 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து, முதல் விக்கட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெளியேறினார். கேப்டன் பாபர் 41 பந்தில் 4 பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் உடன் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் அணி 27 ரன்கள் குவித்தது. எதிரணி தரப்பில் கேப்டன் ஷாகின் ஷா அப்ரிடி நான்கு ஓவர்கள் பந்து வீசி 31 ரன்கள் விட்டுத்தந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்!

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய கிளாடியேட்டர்ஸ் 21 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் விழுந்தது. இந்த நேரத்தில் கேப்டன் ஷாகின் சா அப்ரிடி உசைன் தலாட் உடன் ஜோடி சேர, இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி அணியை மீட்க ஆரம்பித்தார்கள்.

பந்துவீச்சில் கலக்கக்கூடிய ஷாஹீன் ஷா அப்ரிடி இந்த முறை பேட்டிங்கிலும் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 36 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து, ஐந்தாவது விக்கட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெளியேறினார். இவருடன் சேர்ந்து விளையாடிய உசைன் தலாட் 37 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

முதல் நான்கு விக்கெட்டுகளை 21 ரன்களுக்குள் இழந்து விட்டதால் பெரிய இலக்கை நோக்கி நகர்ந்த கிளாடியேட்டர் அணியால் வெற்றியை எட்டிப் பிடிக்க முடியவில்லை. 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பாபரின் பெசாவர் சல்மி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷத் இக்பால் மற்றும் வஹாப் ரியாஸ் இருவரும் தலா மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்.

தற்பொழுது நடந்து வரும் பிஎஸ்எல் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியை வழிநடத்தி வந்த பாபர் ஆஸம், அந்த அணியை விட்டு வந்து பெசாவர் சல்மி அணியை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!