வீடியோ.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. ஒரு வருஷம் கழிச்சு ஒரே ஓவரில் 2 விக்கெட்.. பும்ரா ராக்ஸ்!

0
1473
Bumrah

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணியில் பல முன்னணிவீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஓய்வு அளிக்கப்பட்ட வீரர்கள் ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேர்வில் இருக்கிறார்கள்!

இந்த நிலையில் அயர்லாந்துக்கு எதிராக அந்த நாட்டில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி காயத்தில் இருந்து திரும்பி வந்த ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று அயர்லாந்து டப்ளின் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்மூலம் இந்திய டி20 அணிக்கு தலைமை ஏற்கும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றார்.

இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அறிமுகமானார். மேலும் காயத்தில் இருந்து பும்ராவுடன் சேர்ந்து திரும்பி வந்திருக்கும் பிரசித் கிருஷ்ணாவும் இந்திய டி20 அணிக்கு முதல் முறையாக அறிமுகமானார்.

- Advertisement -

இந்திய அணியில் ஜெய்ஸ்வால் ருத்ராஜ் ஆகியோர் துவக்க வீரர்களாக இருக்க, சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்திலும், திலக் வர்மா நான்காவது இடத்திலும், அடுத்தடுத்த இரண்டு இடங்களில் ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே இருவரும் இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்று இருக்கிறார். மேலும் பந்துவீச்சாளர்களாக பும்ரா, பிரசித் கிருஷ்ணா, அர்ஸ்தீப் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகிய நால்வரும் இருக்கிறார்கள்.

ஆட்டத்தின் முதல் ஓவரை இந்திய அணியின் கேப்டன் பும்ரா வீச வந்தார். முதல் பந்தை பால்பர்னி பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் பழைய பும்பா மீண்டும் திரும்பி வந்தார். பால்பர்னி கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த லார்கன் டக்கர் இரண்டு பந்துகள் ரன் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் சமாளித்தார். ஆனால் மீண்டும் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் அவரை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மூலம் அபாரமாக வெளியேற்றினார் பும்ரா.

ஒரு வருடத்திற்கு மேல் காயத்தால் விளையாடாமல் இருந்து வந்த பும்ரா தான் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார். மேலும் ரசிகர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார். அவரது வருகையை மிக அழுத்தமாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்!

- Advertisement -