கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

வீடியோ ; மும்பையில் பிரித்வி ஷா மீது தாக்குதல் ; புதிய வீடியோக்கள் கசிவு!

இந்திய உள்நாட்டு தொடர்களான துலிப் டிராபி, ரஞ்சி டிராபி அறிமுகப் போட்டியில் சச்சினுக்கு அடுத்து சதம் அடித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தை ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தவர் பிருத்திவி ஷா!

- Advertisement -

இந்திய அணியில் இடம் பிடித்த இவர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து சச்சின் செய்யாத சாதனையையும் செய்து அசத்தினார்!

பின்பு இந்திய கிரிக்கெட்டில் உடற் தகுதி மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்பட அதில் பின்தங்கியும் காயத்தாலும் வாய்ப்புகளை இழந்தார். அடுத்து அணியில் இடம்பெற வாய்ப்பு இருந்த நேரத்தில் ஊக்க மருந்து பிரச்சனையில் சிக்கி மீண்டும் வாய்ப்பை இழந்தார்.

திறமை இருந்தாலும் இவரை தொடர்ந்து சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத பொழுது இவர் இட்ட சில சமூக வலைதள பதிவுகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கோபப்படுத்தியும் இருந்தது. இதையெல்லாம் தாண்டி ரஞ்சி தொடரில் முச்சதம் அடிக்க இந்திய டி20 அணியில் மீண்டும் சமீபத்தில் இடம் கிடைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை ஓசிவராவில் ஒரு ஹோட்டலில் இவர்களைக் கண்ட ரசிகர்கள் சிலர் இரண்டாவது முறையாகவும் செல்பி எடுக்க கேட்டு அதற்குப் பிரிதிவிஷா மறுத்து அவரது நண்பர்களுடன் வெளியேறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஒரு எட்டு பேர் கொண்ட கும்பல் அவர்களை பின் தொடர்ந்து, ப்ரீத்திவிஷா நண்பரின் காரை பேஸ் பால் மட்டையால் அடித்து உடைத்திருக்கிறது. தற்பொழுது இது குறித்து எட்டு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது!

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான சில புதிய வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி பரவி வருகின்றன. அதில் பிரித்திவிஷா ஒரு இளம் பெண்ணிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்வது தற்பொழுது வைரலாகி இருக்கிறது. அதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -
Published by

Recent Posts