வீடியோ.. குட்டி மலிங்கா பதிரனா கிடையாது.. 4.80கோடிக்கு மும்பை வாங்கிய இவர்தான்.. புது செக்!

0
951
MI

தற்பொழுது துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில், வழக்கம் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளும் மிகச் சிறப்பான திட்டத்துடன் வந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் வெளியில் இருந்து யார் என்ன மாதிரி கணிப்புகளை கூறியிருந்தாலும் கூட, அவர்கள் அம்பதி ராயுடுவின் இடத்தை நிரப்புவதில் மட்டுமே கவனமாக இருந்தார்கள்.

- Advertisement -

ஏனென்றால் அவர்களிடம் இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பொழுது இருந்த அனைத்து பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். மேலும் காயத்தில் இருந்த இடதுகை வேகம் பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரியும் வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர்களுக்கு பந்துவீச்சாளர்கள் பெரிய தேவை கிடையாது. எனவே அம்பதி ராயுடுவின் இடத்தை மட்டும் டேரில் மிட்சல் மற்றும் சமீர் ரிஸ்வியை வாங்கி நிரப்பி விட்டார்கள்.

இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தரமான ஃபாரின் வேகப்பந்துவீச்சாளர்களும், ஒரு இந்திய மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளரும் தேவையாக இருந்தது. அவர்கள் முழுக்க இதில் மட்டுமே கவனம் வைத்து பொறுமையாக காத்திருந்தார்கள்.

அவர்களுடைய நல்ல நேரம் கோட்சி 5 கோடிக்கும், அடுத்து இலங்கையின் மதுசங்கா 4 கோடிக்கும் கிடைத்தார்கள். மேலும் இந்தியாவின் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் அடிப்படை விலையில் அப்படியே கிடைத்தார். இந்த இடத்திலேயே மும்பை தேவை தீர்ந்து விட்டது.

- Advertisement -

ஆனால் அவர்கள் மேலும் காத்திருந்து ஒரு சிறப்பான வேலையை செய்து முடித்தார்கள். இலங்கையை சேர்ந்த மலிங்காவை போல் அப்படியே வீசக்கூடிய 29 வயதான நுவன் துஷாராவை 4.80 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு அடையாளமாக இருந்தவர் மலிங்கா. தற்பொழுது அவர் மீண்டும் பந்துவீச்சு பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய நாட்டிலிருந்து அவரைப் போலவே அச்சு அசலாகப் பந்து வீசும் வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வந்திருக்கிறார்கள்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸில் இலங்கையிலிருந்து இன்னொரு குட்டி மலிங்காவாக பதிரனா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதற்கு போட்டியாக அவர்கள் இன்னொரு குட்டி மலிங்காவை இலங்கையில் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ள வீரர்தான் மலிங்காவை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து இருக்கிறார் என்பது உண்மை!