வீடியோ: பாய்ந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த கேஎல் ராகுல்.. மிரண்டுபோன பேட்ஸ்மேன்; ஜடேஜாவின் 250வது விக்கெட் வீடியோ!

0
2675

யாருமே எதிர்பார்க்காதவாறு பாய்ந்து கவாஜாவின் கேட்சை பிடித்து அசத்திய கேஎல் ராகுல் வீடியோ கீழே உள்ளது.

டெல்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வருகிறது ஆஸ்திரேலிய அணி.

- Advertisement -

முதல் விக்கெட்டுக்கு கவாஜா மற்றும் வார்னர் இருவரும் 50 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 15 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் உள்ளே வந்த லபுஜானே 18 ரன்கள் அடித்திருந்தபோது அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ டபிள்யூ ஆகி வெளியேறினார்.

அஸ்வினின் அதே ஓவரில் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க, உணவு இடைவேளைக்கு முன்பு வரை 94 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி சற்று தடுமாறியது. கவாஜா அரைசதம் மற்றும் டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னுடன் களத்தில் நின்றனர்.

உணவு விடுவிகளுக்கு பின்பு வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்கள் ஆட்டம் இழந்தார். மிகச் சிறப்பாக ஆடிவந்த துவக்க வீரர் கவாஜா 81 ரன்கள் இருந்தபோது, ஜடேஜாவின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தார். ஸ்கொயர் திசையில் நின்ற கேஎல் ராகுல் அதை பாய்ந்து பிடித்து அசத்தினார். அடுத்ததாக உள்ளே வந்த அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழக்க, 182 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆஸி., அணி தடுமாறி வருகிறது.

- Advertisement -

கவாஜாவின் கேட்ச்சை பிடித்த கே எல் ராகுல் வீடியோ: