வீடியோ.. “இங்கிலாந்தின் நிலைமையை பார்க்க எனக்கே பாவமாதான் இருக்கு!” – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் பரபரப்பு பதில்!

0
610
Cummins

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 8ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று இருக்கும் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது, இந்த வார இறுதியில் தெரிந்து விடும்.

- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் அடுத்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிகப்பெரிய போட்டியாக அமையும்.

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோற்றால் ஏறக்குறைய பாகிஸ்தான் அணி வெளியேறிவிடும்.

அதேபோல் தற்பொழுது இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பிலிருந்து 99 சதவீதம் வெளியேறி விட்டாலும், இந்தியாவுடன் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் தோற்றால் மொத்தமாக வெளியேறிவிடும்.

- Advertisement -

எனவே நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டிகள் இந்த வாரத்திற்குள் நடைபெற்ற முடிய இருக்கின்றன.

மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள்தான், 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே முதல் எட்டு இடங்களுக்குள் வர தற்போது புள்ளிப் பட்டியலில் கீழே இருக்கும் அணிகள் கடுமையாக போராட வேண்டும். மிகக் குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் நிலைமை மோசமாக இருக்கிறது.

மிகப்பெரிய அணியான இங்கிலாந்தின் தற்போதைய நிலை குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

இந்தக் கேள்வியை கேட்ட பத்திரிகையாளருக்கு பதில் அளித்த அவர் கூறும் பொழுது “கடந்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தின் நிலையை பார்க்கும் பொழுது சோகமாகத்தான் இருக்கிறது. இதற்கு மேல் இதில் நான் உங்களுக்கு ஏதும் சொல்ல முடியாது!” என்று கூறிவிட்டார்!