வீடியோ ; 30 மீட்டர் ஓடிவந்து பறவை போல் பறந்து கேட்ச் எடுத்து அசத்திய கிளன் பிலிப்ஸ்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0
1438
T20iwc2022

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் பிரதான சுற்று போட்டி இன்று ஆரம்பித்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் பின் ஆலன் இருவரும் களமிறங்கினார்கள்.

- Advertisement -

இதில் பின் ஆலன் ஆட்டத்தில் அனல் பறந்தது. 16 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 58 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் குவித்து களத்தில் நின்றார். நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சரியாக 200 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள். துவக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். அதற்கடுத்து வந்த மிச்செல் மார்ஸ் மற்றும் ஸ்டாய்நிஸ் இருவரும் உடனே வெளியேறினார்கள்.

இதில் மிட்செல் சான்ட்னர் வீசிய ஓவரில் பந்தை ஸ்டாய்நிஸ் காற்றில் தூக்கி அடிக்க, பந்தின் திசைக்கு தூரமாய் நின்று இருந்த கிளன் பிலிப்ஸ் வேகமாய் ஓடி வந்ததோடு, காற்றில் பறந்து பந்தை அபாரமாக பிடித்தார். அதே சமயத்தில் விழுந்த வேகத்தில் பந்து கையில் இருந்து நழுவாமல் மிக எச்சரிக்கையாக நுட்பமாக பார்த்துக்கொண்டார். இது அத்தனையும் ஓரிரு நொடிகளில் நடந்த விஷயம்.

- Advertisement -

இவர் பிடித்த இந்த கேட்ச் இந்த டி20 உலக கோப்பை தொடரின் மிகச்சிறந்த கேட்ச் ஆக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. லிங்க்கை கிளிக் செய்யவும்!