வீடியோ… சுட்டிக் குழந்தை என்கிட்டயேவா? – சாம் கரனை ரெண்டு சிக்ஸருக்கு அனுப்பிய தல தோனி

0
333
Dhoni

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற மகேந்திர சிங் தோனி முதலில் தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் மற்றும் கான்வே இருவரும் களம் புகுந்தார்கள்.

- Advertisement -

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 9.4 ஓவரில் 84 ரன்கள் சேர்த்தது. ருத்ராஜ் 31 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த முறை ரகானேவை அனுப்பாமல் சிவம் துபே அனுப்பப்பட்டார். அவரது பங்குக்கு 17 பந்தில் 28 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் அடக்கம்.

இதற்கு அடுத்து வந்த மொயின் அலி 10, ரவீந்திர ஜடேஜா 12 ரன்களில் வெளியேறினார்கள். 200 ரன்களை அடிக்கும் என்று எதிர்பார்த்த சென்னையணி கடைசி மூன்று ஓவர்களில் தடுமாற்றத்தை சந்தித்தது. கான்வே மிகச்சிறப்பாக விளையாடினாலும் அவரும் கடைசியில். தடுமாறினார்.

- Advertisement -

இந்த நிலையில் ஷாம் கரனின் கடைசி ஓவரின் முதல் பந்தில் ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்க மகேந்திர சிங் தோனி வந்தார். சந்தித்த முதல் பந்தை தவறவிட்ட அவர் இரண்டாம் பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

மீண்டும் அதே ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த அவர் டீப் பாயிண்ட் திசையில் அபாரமான ஒரு சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்து புல்டாஸ் ஆக வர அதை டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சர் அடித்து அசத்தினார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் 200 ரன்களை எட்ட தடுமாறிய சென்னை அணி சரியாக நான்கு விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எட்டியது. மகேந்திர சிங் தோனி 4 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இறுதிவரை களத்தில் நின்ற கான்வே 52 பந்தில் 16 பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 92 ரன்கள் குவித்தார்.