வீடியோ; ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா? ஆஸ்திரேலியர்கள் குற்றச்சாட்டு உண்மையா?

0
729
Jadeja

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு கிளம்பும் முன்பே ஆஸ்திரேலியர்களின் இந்திய ஆடுகளங்கள் மீதான குற்றச்சாட்டுகள் வரத் துவங்கிவிட்டது!

இந்த நிலையில் போட்டிக்கு முன்பு நேற்று ஆடுகளத்தின் புகைப்படங்கள் வெளியாக, ஆடுகளத்தில் ஒரு பக்கத்தில் நீர் ஊற்றாமல் ரோலர் உருட்டாமல் ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன்களை குறிவைத்து வேலை செய்வதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததோடு இதில் ஐசிசி தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று துவங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை வெறும் 63.5 ஓவரில் 177 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் செய்து பொட்டலம் கட்டியது.

இந்திய அணி தரப்பில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின் வந்த ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்!

இன்று ரவீந்திர ஜடேஜா பந்து வீசும் தனது விரல்களுக்கு ஒரு ஆயில்மெண்டை தடவிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோவை ஆஸ்திரேலியர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பந்தை சேதப்படுத்துவது எப்படி என்று உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க தொடரின் போது பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலியா அணியினரின் புகைப்படங்களை பதிலடியாக பதிவிட்டு வருகிறார்கள். இதற்கான வீடியோ லிங்க் கீழே!