வீடியோ.. தோனி மொமெண்ட்.. போட்டியை புரட்டி போட்ட இடம்.. சஞ்சு சாம்சனின் தொடரும் பரிதாபம்!

0
449
Samson

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் முடிவடைந்த நிலையில், நேற்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டிஸ் அணி நிக்கோலஸ் பூரன் 41 மற்றும் கேப்டன் ரோமன் பவல் 48 ரன்கள் எடுக்க, ஆறு விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் சாகல் மற்றும் அர்ஸ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் இசான் கிஷான் இந்த முறை ஏமாற்றம் அளித்தார்கள். பிறகு வந்த சூரியகுமார் 20 பந்தில் 21 ரன் என நிதானம் காட்ட, அடுத்து வந்த திலக்கு வர்மா 22 பந்தில் 39 ரன்கள் என அதிரடியில் மிரட்டினார்.

இவர்கள் இருவரும் வெளியேறிய பிறகு நான்கு ஓவர்களுக்கு ஐந்து ஓவர்களுக்கு 37 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அணியை கொண்டு வந்தார்கள். இந்த போட்டியில் இந்த இடத்தில் இந்திய அணி வெகு எளிதாக வெற்றி பெறும் நிலையே இருந்தது.

பதினாறாவது ஓவரை வீச வந்த ஜேசன் ஹோல்டரின் சிறப்பான பந்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா கிளீன் போல்ட் ஆக, இந்திய அணிக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டது. இவர் வெளியேறியதை தொடர்ந்து அக்சர் படேல் களத்திற்கு வந்தார். எப்படியும் சஞ்சு சாம்சன் இவரை வைத்துக்கொண்டு ஆட்டத்தை முடித்து விடுவார் என்றுதான் இந்திய ரசிகர்கள் நினைத்து கொண்டு இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தான் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னுக்கு ஓட, பந்தை கையில் பிடித்த மேயர்ஸ் பிக்கப் செய்த வேகத்தில் அப்படியே ஒற்றை ஸ்டெம்ப்பை நோக்கி குறிபார்த்து அடிக்க, பந்து இலக்கை தாக்கியது. திரும்பி ரீப்ளேவில் பார்க்கும் பொழுது அவுட் என்று தெரிய வந்தது.

இந்த எதிர்பாராத ரன் அவுட் காரணமாக சஞ்சு சாம்சன் பரிதாபமாக வெளியேறினார். அதே சமயத்தில் இந்திய அணியின் வெற்றிக்கனவும் உடைந்தது. இந்திய அணியின் பக்கம் இருந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பக்கம் மாறிய இடம் இந்த இடம்தான். இதற்கான வீடியோ இணைப்பு இறுதியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இதை நெட்டிசன்கள் பலர் 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மகேந்திர சிங் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறியதோடு ஒப்பிட்டு பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!