வீடியோ.. பும்ரா செஞ்ச அதே தப்பை பண்ணிய சிஎஸ்கே வீரர்.. பாகிஸ்தான் ஏ பைனலில் இமாலய ரன் குவிப்பு

0
654

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை தலைநகர் கொழும்பில் வைத்து நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன .

இந்த ஆசிய கோப்பை போட்டிகளின் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி இலங்கை ஏ அணியையும் இந்தியா ஏ அணி பங்களாதேஷ் ஏ அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று மதியம் கொழும்பில் தொடங்கியது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த முறை சிறப்பாக வீசிய இந்திய அணியின் பந்து வீச்சு இந்த முறை சுமாராகவே இருந்தது. ஆட்டத்தில் நான்காவது ஓவரில் இந்தியா ஏ அணியின் ஆல்ரவுண்டர் ராஜவர்தன் ஹங்கரேகர் பாகிஸ்தான் அணியின் சமி அயூப் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் அவர் நோபால் வீசியதால் சமி அய்யூப்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 17.2 ஓவர்களில் 121 ரன்கள் சேர்த்தனர். 51 பந்துகளில் 59 ரகளை எடுத்திருந்த சமி அய்யூப் மனவ் சுதர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணியின் மற்றொரு துவக்க வீரரான ஃபர்கான் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார். அவர் 62 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்

பாகிஸ்தான் ஏ அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தாய்யப் தாஹிர் மிகச் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தார். இவரது அதிரடி ஆட்டம் பாகிஸ்தான் அணி விரைவாக ரன்களை குவிக்க உதவியது . 71 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 108 ரண்களை எடுத்த தாஹிர் ஹங்கரேக்கர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பின் வரிசையில் வந்த வீரர்களின் அதிரடி ஆட்டத்தாலும் பாகிஸ்தான் அணியின் ரன் வேகம் உயர்ந்தது . இதனால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை எடுத்தது. ஒரு கட்டத்தில் 370 ரண்களுக்கு மேல் எடுக்கும் நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 352 ரன்கள் மட்டுமே எடுத்தது .

2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் பக்கர் ஜமான் விக்கெட்டை பும்ரா நான்காவது ஓவரிலேயே வீழ்த்தினார். ஆனால் அந்தப் பந்து நோபால் ஆனதால் மீண்டும் வாய்ப்பு பெற்ற ஜமான் மிகச் சிறப்பாக ஆடி 114 ரன்கள் எடுத்தார் அதேபோன்று இந்த போட்டியிலும் நான்காவது ஓவரில் துவக்க வீரரான சமி அய்யூப் விக்கெட்டை ராஜவர்தன் ஹங்கரேக்கர் வீழ்த்தினார். ஆனால் அந்தப் பந்து நோபால் ஆனதால் மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்ற அய்யூப் மிகச் சிறப்பான ஒரு துவக்கத்தை பாகிஸ்தான் அணிக்கு அமைத்துக் கொடுத்தார்.

பும்ரா நோபல் வீசிய போட்டியில் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது. தற்போது வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் ஹங்கரேகர் வீசிய நோபல் இந்திய ஏ அணியை பாதிக்குமா என்பது இரண்டாவது பேட்டிங்கிற்கு பின்பு தான் தெரியும்.