வீடியோ.. ஸ்லாக் ஓவர்ஸ் கிங்.. மேக்ஸ்வெல்லுக்கு பும்ரா போட்ட ஸ்பெஷல் பிளான்.. ஆஸி 400 ரன் கனவுக்கு தடை!

0
683
Bumrah

தற்பொழுது ராஜ்கோட் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்திருக்கிறது!

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

இதை பயன்படுத்தி அந்த அணியின் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் மற்றும் ஸ்மித் இருவரும் அதிரடியாக 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மார்ஸ் 84 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து சதத்தை தவற விட்டு ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய ஸ்மித் 61 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதி வரை நின்று அணிக்காக போராடிய லபுசேன் அதிரடியாக 58 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் சேர்த்தது.

இந்தப் போட்டிக்கு காயத்தால் தென்னாப்பிரிக்க தொடரில் இடம் பெறாத, தற்போது நடைபெற்று வரும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத அதிரடி வீரர் மேக்ஸ்வெல் இடம் பெற்றார்.

- Advertisement -

மேல் வரிசை வீரர்கள் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்க, வழக்கமான அதிரடியில் மேக்ஸ்வெல் மிரட்டுவார், ஆஸ்திரேலியா அணி 400 ரன்களை கடந்து இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் என்று பலரும் நினைத்திருந்தார்கள்.

இந்த நேரத்தில் பந்து வீச்சுக்கு வந்த பும்ரா அருமையான யார்க்கர் ஒன்றை அனுப்பி கிளீன் போல்ட் செய்து மேக்ஸ்வெல்லை 5 ரன்களில் வெளியேற்றி ஆஸ்திரேலிய தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பந்து பழையதாக இருக்கும் பொழுது ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். பெரும்பாலும் இப்படியான பந்துகள் உள்நோக்கி ஸ்விங் செய்யப்படும். இதன் காரணமாக பந்து ஃபுல் லென்த்தில் உள்ளே வரும் என்று மேக்ஸ்வெல் எதிர்பார்த்தார். அதற்கேற்றபடி விளையாடினார். ஆனால் பும்ரா பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யவில்லை. மாறாக நேராக யார்க்கர் அனுப்பினார்.

இதனால் ஏமாந்த மேக்ஸ்வெல் கிளீன் போல்ட் ஆனார். மேலும் ஆஸ்திரேலியா அணி 400 ரன்கள் கடக்கவும் முடியாமல் போனது. இந்தப் போட்டியில் பும்ரா தனது முதல் ஐந்து ஓவர்களில் மார்ஸ் அதிரடியால் 51 ரன்கள் கொடுத்திருந்தார். ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் இறுதிக்கட்டத்தில் 30 ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி, தான் எப்பொழுதும் டெத் ஓவர் கிங் என்று காட்டியிருக்கிறார்!