வீடியோ.. லெப்டில் பந்து ரைட்டான கேட்ச்.. காற்றில் பறந்த கோலி.. மார்ஸை பழிதீர்த்த பும்ரா!

0
1046
Virat

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தினார். ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய தரப்பில் ஹெட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. இந்திய அணி தரப்பில் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இடம் பெறவில்லை. அவருடைய காயம் குணமடையவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

அதே சமயத்தில் இந்திய அணி விக்கெட் காய்ந்து இருக்கும் காரணத்தினால் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டு வந்திருக்கிறது. இந்திய பந்துவீச்சு மிகவும் பலமான ஒன்றாக இந்த போட்டியில் அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் மார்ஸ் இருவரும் களமிறங்கினார்கள். இந்த ஜோடி கடைசியாக நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் பும்ரா சிராஜை அதிரடியாக தாக்கி ஆடி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

போட்டியின் முதல் ஓவரை பும்ரா வீச வார்னர் ஒரு ரன் மட்டும் எடுத்தார். இதற்கு அடுத்து சிராஜ் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி மூலம் நான்கு ரன்கள் வந்தது. இரண்டு ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பில்லாமல் ஐந்து ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாவது ஓவரை வீச வந்த பும்ராவை மார்ஸ் எதிர்கொண்டார். ஓவரில் ஒரு பந்து அவுட் சைடு எட்ஜ் எடுத்து, முதல் ஸ்லீப்பில் நின்ற விராட் கோலியின் லெப்ட் சைடு சென்றது, ரைட் ஹேண்ட் இயல்பாகக் கொண்ட விராட் கோலி, காற்றில் தாவி கடினமான திசையில் இருந்து அற்புதமாக கேட்ச் செய்து மார்ஸை வெளியே அனுப்பினார். கடைசி போட்டியில் மார்ஸ் அடித்ததற்கு பும்ரா சரியான போட்டியில் திருப்பி பழி தீர்த்து இருக்கிறார்.