வீடியோ; பால் ஆப் த இயர்.. 2019 உலகக்கோப்பை சம்பவத்தை ரீ கிரியேட் செய்த ஸ்டார்க்!

0
493
Starc

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட உலகப் புகழ்பெற்ற ஆசஸ் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் கிரீஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் இருவரையும் கொண்டு வந்த இங்கிலாந்து அணி அதிரடியாக வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் மிக முக்கியமான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தா அணி மிக அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை விட மிக அதிகபட்ச முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்று இருந்தது. ஆனால் போட்டியின் நான்காவது ஐந்தாவது நாளில் பெய்த மழை, ஆஸ்திரேலியா அணியை மீண்டும் ஆசஸ் தொடரை தக்க வைக்க உதவி செய்தது.

இந்த நிலையில் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வழக்கம்போல இங்கிலாந்து அணியின் துவக்க ஜோடி அதிரடியில் ஈடுபட்டது. அதிரடியாக விளையாடிய பென் டக்கட் 41 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றும் ஒரு அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஜாக் க்ரவுலி 37 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மயில் அலி 47 பந்தில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் ஐந்து ரன்னில் நடையை கட்ட இங்கிலாந்து அணி பெரிய நெருக்கடியில் விழுந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஐந்தாவது விக்கட்டுக்கு களம் வந்த இளம் வீரர் ஹாரி புரூக் மிக அதிரடியாக விளையாடி 91 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, ஜானி பேர்ஸ்டோ 4 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்கள்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் விக்கட்டை அற்புதமான வேகம் மற்றும் ஸ்ங்க் பந்துவீச்சின் மூலம் கிளீன் போல்ட் முறையில் மிட்சல் ஸ்டார்க் கைப்பற்றினார்.

தன்னுடைய ஸ்லிங் ஆக்ஷனில் வேகம் மற்றும் ஸ்விங் கொடுத்து, பந்தை மேலே வீசி ஸ்டார்க் ஸ்டோக்ஸ் விக்கட்டை கைப்பற்றியதை  பார்த்த பொழுது, 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஸ்டோக்ஸை இதே முறையில் வெளியேற்றியது போலவே இருந்தது. இரண்டுக்குமான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் இழந்து விளையாடி வருகிறது. ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், மார்ஸ் மற்றும் மர்பி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.