வீடியோ; பென் ஸ்டோக்ஸ் கவாஜாவுக்கு விரித்த வித்தியாசமான வலை? இந்த பீல்ட் செட் பெயர் என்ன?

0
5080
Ashes2023

மூன்று நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் உலக புகழ்பெற்ற ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே துவங்கியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்ந்தெடுத்து முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் எட்டு விக்கட்டுகள் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்து அதிரடியாய் டிக்ளர் செய்து ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

இதற்கடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு திட்டங்களுக்கு எதிராகக் கொஞ்சம் தாக்குப் பிடித்து 386 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

ஆஸ்திரேலியாவில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட அதிக ரன்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தது. இந்த நிலையில் ஆண்டர்சன் மிகச் சிறப்பான பந்தில் அலெக்ஸ் ஹேரியை வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோர் ஒவ்வொரு ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் ஒவ்வொரு ஃபீல்டிங்கை வைத்து புத்திசாலித்தனமாக விக்கட்டை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் தங்களுக்கு கீழாகக் கட்டுப்படுத்தினார்.

- Advertisement -

இதில் சதம் தாண்டி விளையாடிக் கொண்டிருந்த உஸ்மான் கவஜாவுக்கு ஸ்லிப் பீல்டிங்கை முன்னால் வைத்தது போல ஆறு வீரர்களை மூன்று மூன்றாக முன்னாள் பிரித்து நிறுத்தி, ஆடுவதற்கு இடமில்லாமல் செய்து, அவரை தூக்கி அடிக்க முயற்சி செய்து விக்கட்டை வீழ்த்தினார்.

தற்பொழுது சமூக வலைதளங்களில் பென் ஸ்டோக்ஸ் உடைய ஃபீல்டிங் செட்டப் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் பேட்டிங் மட்டும் அல்லாது பந்துவீச்சு ஃபீல்டிங் என எல்லாமே அதிரடியாக மாறி இருக்கிறது.

உஸ்மான் கவஜா விக்கட்டுக்காக வைக்கப்பட்ட ஃபீல்டிங் செட்டப் முறைக்கு ப்ரும்பெல்லா என்று பெயர். இந்த முறையை பேட்ஸ்மேனுக்கு பின்னால் பயன்படுத்தி இருந்தால் அது அம்பர்லா முறை என்று பெயர்.