வீடியோ.. 38 ரன்.. 271 ஸ்ட்ரைக்ரேட்.. 49 வயதில் மிஸ்பா அதிரடி.. ஹர்பஜன் சிங் அணி தோல்வி!

0
1302
Misbah

அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் முடிவடைந்து, தற்பொழுது யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது!

இந்த தொடரில் மொத்தம் ஆறு பணிகள் பங்கு பெறுகின்ற. இந்த ஆறு அணிகளில் நான்கு அணிகளுக்கு உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர் ஆகிய நான்கு இந்தியர்கள் கேப்டன்களாக இருக்கிறார்கள். மீதம் இரண்டு அணிக்கு பென் டக் மற்றும் மிஸ்பா உல் ஹக் இருவரும் கேப்டன்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தத் தொடரில் ஹர்பஜன்சிங் தலைமை தாங்கும் மோரிஸ்வில்லே யூனிட்டி அணியும், மிஸ்பா உல் ஹக் தலைமை தாங்கும் நியூயார்க் வாரியர்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நியூயார்க் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணிக்கு முதல் துவக்க ஆட்டக்காரராக வந்த கம்ரன் அக்மல் எட்டு பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் அதிரடியாக 23 ரன்கள் குவித்தார்.

இதற்கு அடுத்து மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரராக களத்திற்கு வந்திருந்த இலங்கையின் திலகரத்தினே தில்சன் 19 பந்துகளில் மூன்று பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் அதிரடியாக அடித்தார். இதற்கு அடுத்து வீரராக களத்திற்கு வந்த ரிச்சர்ட் லெவி ரன்கள் எடுக்காமல் வெளியேறினார்.

- Advertisement -

நான்காவது வீரராக வந்த 49 வயதான மிஸ்பா உல் ஹக் தான் சந்தித்த முதல் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு அடுத்து ஏழாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் அபாரமாக ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து 14 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 38 ரன்கள் நொறுக்கினார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

இதற்கு அடுத்து வந்த பாகிஸ்தானின் மற்றுமொரு அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி 11 பந்துகளில் மூன்று பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 22 ரன்கள் அடிக்க, 10 ஓவர்கள் முடிவில் நியூயார்க் வாரியர்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 1 39 ரன்கள் குவித்து அசத்தியது. வந்து வீட்டில் ஸ்ரீசாந்த் இரண்டு ஓவர்களுக்கு 25 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து ஹர்பஜன் சிங் அணிக்கு ஷேகான் ஜெயசூர்யா அதிரடியாக 24 பந்துகளில் ஆறு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 44 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து ப்யனார் 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். மேற்கொண்டு யாரும் பெரிய ரன்கள் அதிரடியாக அடிக்காததால், மோரிஸ்வில்லே யூனிட்டி அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது!