வீடியோ.. 24 பந்து.. 10 ஃபோர்.. அதிரடி அரைசதம்.. ஜோ ரூட்டின் உலக கோப்பைக்கான வெறித்தனம்!

0
271
Root

கிரிக்கெட்டில் ஓவர்கள் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு சவால்கள் அதிகமாக இருக்கும். அந்த வடிவத்தில் கிரிக்கெட்டை விளையாடுவது எளிதான ஒன்றாக இருக்காது. இதனால் நீண்ட வடிவத்தில் கிரிக்கெட் கலையாக இருப்பதோடு, உண்மையான சவால்களோடு ரசிகர்களுக்கு கிடைக்கும்!

கிரிக்கெட் பற்றியான இந்த உண்மையைத் தாண்டி, தற்பொழுது ஓவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட மிகவும் குறைக்கப்பட்ட கிரிக்கெட் வடிவம்தான் உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டின் வருகை நிறைய இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதே சமயத்தில் கிரிக்கெட்டின் உண்மையான சவால்கள் குறைந்து, கட்டுப்படுத்தப்பட்ட திறமைகள் போதுமானதாக இருக்கிறது. டி20 கிரிக்கெட் வடிவத்தில் இருந்து இன்னும் 20 பந்துகளை குறைத்து, தற்பொழுது இங்கிலாந்தில் நூறு பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் டாசில் தோற்ற லண்டன் ஸ்பிரிட் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் டான் லாரன்ஸ் மிகச் சிறப்பாக அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 93 ரன்கள் குவித்தார். இதை அடுத்து நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளின் முடிவில் லண்டன் ஸ்பிரிட் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது.

இதை அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய டிரண்ட் ராக்கெட்ஸ் அணிக்கு அலெக்ஸ் ஹேலஸ் 15, டேவிட் மலான் 1, டி.கே.சி 33, காலின் முன்ரோ 24, டேனியல் சாம்ஸ் 32, கேப்டன் லீவிஸ் கிரிகோரி 6 ரன்கள் எடுத்தார்கள். ஆரம்பத்திலேயே நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் தற்போதைய உலக கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் விளையாட வந்தார். உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக அவர் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நூறுபந்து போட்டியை எப்படி எதிர் கொள்வார் என்று ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எதிர்பார்ப்பும் இருந்தது.

இந்த நிலையில் களம் இறங்கிய ஜோ ரூட் அதிரடியில் மொத்த பேரையும் மிரள விட்டுவிட்டார். பந்துகளை அனாயசமாக பவுண்டரிகளுக்கு அனுப்பினார். இன்னொரு புறத்தில் மாடர்ன் கிரிக்கெட் ஷாட் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சிக்ஸர்கள் அடித்து ஆச்சரியப்படுத்தினார்.

மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 24 பந்துகளில் அரைசதம் எடுத்து தொடர்ந்து விளையாடினார். மொத்தம் 35 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நூறு பந்துகளின் முடிவில் டிரண்ட் ராக்கெட்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் ஸ்ப்ரிட் அணி வெற்றி பெற்றது.

ஜோ ரூட் தற்பொழுது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தை தாண்டி டி20 கிரிக்கெட் வடிவத்திலும் உலகம் முழுவதும் விளையாடுவதற்கு தன்னை மிக வேகமாக தயார்படுத்திக் கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அனாயசமாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறார். அதனுடைய தொடர்ச்சியாக தற்பொழுது 100 பந்து தொடரிலும் அவரது அதிரடி தொடர்கிறது!