வீடியோ.. 2ரன் திரில் போட்டி.. 170 ஸ்ட்ரைக் ரேட்  ரெய்னா சிக்னேச்சர் அதிரடி.. லெஜெண்ட்ஸ் லீக் 2023!

0
816
Raina

தற்பொழுது இந்தியாவில் ஆறு அணிகளை கொண்டு லெஜெண்ட் கிரிக்கெட் லீக் என்று டி20 வடிவத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை வைத்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது

இந்தத் தொடரில் இந்தியா கேப்பிட்டல், பில்வாரா கிங்ஸ், மணிபால் டைகர், குஜராத் ஜெயின்ட்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சவுத்ர்ன் சூப்பர் ஸ்டார் என ஆறு அணிகள் விளையாடுகின்றன.

- Advertisement -

இந்தத் தொடர் நவம்பர் 18ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் டிசம்பர் ஒன்பதாம் தேதி இறுதிப் போட்டி நடைபெற்று முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று போட்டியில் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இதில் முதலில் டாசில் வெற்றி பெற்ற கம்பீர் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார். டிவேன் ஸ்மித் 3, மார்ட்டின் கப்தில் 2 என உடனுக்குடன் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து குர்கீரத் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் இணைந்து அதிரடியாக ரன்கள் குவித்தார்கள். குர்கீரத் சிங் 54 பந்துகளில் 89 தங்கள் எடுத்தார்.

இவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் சுரேஷ் ரெய்னா 27 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 46 ரன்கள் அடித்தார். இந்த அதிரடியில் அவருடைய ஃபேவரைட் ஷாட்டான இன்சைடு அவுட் ஷாட்டை அடித்து அமர்க்களப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.

இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு, அந்த அணியின் கேப்டன் கம்பீர் முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறினார். வேறு யாரும் அந்த அணியில் பெரிதாக விளையாடவில்லை.

நிலைத்து நின்று கெவின் பீட்டர்சன் மட்டுமே அதிரடியில் மிரட்டினார். அவர் 48 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியின் காரணமாக பரபரப்பாக சென்ற போட்டியில், இறுதியாக இந்தியா கேப்பிட்டல் 186 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -