இந்தியாவின் பேட்டிங் கோச்சா நான் வரேன்.. இங்கிலாந்து வீரர் அறிவிப்பு.. பிசிசிஐ மாற்று யோசனை

0
1523
Abhishek

இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக வருவதற்கு இங்கிலாந்து முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் விருப்பம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடர்களை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத காரணத்தினால், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மாற்றப்பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

புதிய பேட்டிங் பயிற்சியாளர்

இந்திய அணியின் கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் பந்துவீச்சாளர்கள் ஓரளவுக்கு நல்ல முறையில் செயல்பட்டிருந்தார்கள். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன விதம் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருந்தது. மேலும் அவர்கள் சாதாரண அடிப்படை விஷயங்களில் தவறு செய்து தொடர்ந்து ஆட்டம் இழந்தார்கள்.

குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒன்பது இன்னிங்ஸ்களில் எட்டு முறை ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை விளையாடி ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பொறுப்புக்கு அழுத்தம் அதிகரித்து இருக்கிறது. எனவே அவரை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை கொண்டு வர பிசிசிஐ யோசித்து வருவதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து வீரர் விருப்பம்

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் இந்திய அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக வருவதற்கு விருப்பம் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். மேலும் அவர் தற்போது சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிடத் தகுந்த அளவில் விளையாடிய வெளிநாட்டு வீரராக அவர் இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய வீரர்களிடம்.. பிசிசிஐ முதல்ல இதை தடை செய்யுங்க.. உங்கள நம்ப முடியல – ஹர்ஷா போக்லே கருத்து

இத்துடன் தற்போது இந்திய ஏ அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வரும், சௌராஷ்டிரா மாநில அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் சிஸ்டன்சு கோடக்கை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கொண்டுவர பிசிசிஐ யோசித்து வருவதாகவும் செய்திகள் கூறுகிறது.

- Advertisement -