15 வருஷமா டி20 ஆடுறோம்.. அந்த ஒரு தோல்வி மாதிரி நாங்க எதுவுமே பார்க்கல – பாக் இமாத் வாசிம் ஆதங்கம்

0
3159

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலமாக மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அமெரிக்க அணியிடம் தோற்றது மற்றும் சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தோல்வி குறிப்பிடத்தக்க காரணிகள் ஆகும்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் மூத்த ஆல் ரவுண்டரான இமாத் வாசிம் பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை வரை ஓரளவு நன்றாக செயல்பட்டு கொண்டிருந்த பாகிஸ்தான் அணிக்கு அதற்குப் பிறகு அடிக்கு மேல் அடி என்பது போல தொடர் தோல்விகளால் துவண்டு வருகிறது. பாபர் அசாம் தலைமையில் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி வளர்ந்து வரும் அமெரிக்க அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதன் எதிரொளியாக டி20 உலக கோப்பை அடுத்த சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறியது. மேலும் சொந்த மண்ணில் நடைபெற்ற கத்துக்குட்டி அணியான வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மட்டும் அல்லாமல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரிய கருப்பு புள்ளியாக அமைந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் கூறும் போது “ஆம், உண்மையாக அமெரிக்க அணிக்கு எதிரான டி20 உலக கோப்பையில் நாங்கள் தோல்வி அடைந்த போது மிகவும் ஏமாற்றமடைந்தேன். நான் அதில் விளையாடவில்லை என்றாலும் விளையாட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எதிர்பாராத விதமாக எனக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அமெரிக்க அணிக்கு எதிரான தோல்வி என்னை ஏமாற்றம் அடைய வைத்தது.

நாங்கள் 15 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறோம். அந்தத் தோல்விதான் எங்களது தோல்வியில் குறைந்த நிலையாக அமைந்துள்ளது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த சூழ்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான தோல்வி என்பது கடினமான ஒன்றாகும். அந்த ஆட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களை பார்த்தேன். நிர்வாகமும், கேப்டனும் ஆடுகளத்தின் தன்மையை தவறாக புரிந்து கொண்டதாக கேள்விப்பட்டேன்.

இதையும் படிங்க:வெறும் 1 மாதம்.. இந்திய வீரரை கோச் பதவியிலிருந்து தூக்கிய கென்யா கிரிக்கெட்.. காரணம் என்ன.?

ஆனால் தட்டையான ஆடுகளம் அல்லது சுழலும் ஆடுகளம் என எதுவாக இருந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். வானிலை என்பது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. இதில் எந்த விளக்கங்களையும் சொல்லி பயனில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதே உண்மை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -