2025 18வது ஐபிஎல் சீசனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்ட காரணம் குறித்து அந்த அணியின் இயக்குனர் வெங்கி மைசூர் பேட்டி அளித்திருக்கிறார்.
கடந்த சீசனில் ரகானேவை சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. மேலும் அவரை மூன்றாவது இடத்தில் அனுப்பி அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாட சொல்லி இருந்தது. இதன் காரணமாக அவரிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி பேட்டிங் வெளியில் வந்தது. இது அவரை இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைத்துச் சென்றது. தற்போது கொல்கத்தா அணிக்கு கேப்டனாகவும் கொண்டு வந்திருக்கிறது.
ரகானே தெரிவித்த கருத்து
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தன்னை நிதானமாக விளையாட வேண்டும் என்று மற்றவர்களைப் போல கூறவில்லை என்றும், எது இயல்போ அதன்படி விளையாடுங்கள் என்று கூறியதாகவும், இதன் காரணமாக தன்னால் அதிரடியாக விளையாட முடிந்தது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி உள்நாட்டு டி20 தொடரில் மும்பை அணிக்காக தொடர்ந்து பெரிய அதிரடியில் ரகானே ஈடுபட்டார். இதன் காரணமாக அந்த அணி இந்த ஆண்டு சையத் முஸ்தாக் அலி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் கூட 23 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கிய வெங்கடேஷ் ஐயரை கேப்டனாக கேகேஆர் அணிக்கு கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேப்டனாக ரகானாவை கொண்டு வந்தது ஏன்?
இதுகுறித்து கேகேஆர் அணி இயக்குனர் வங்கி மைசூர் பேசும் பொழுது “ஐபிஎல் மிகவும் தீவிரமான ஒரு தொடராகும். வெங்கடேஷ் ஐயரை பற்றி நாங்கள் மிகவும் நன்றாகவே நினைக்கிறோம். ஆனால் ஒரு இளைஞரை கேப்டனாக நியமிக்கும் பொழுது அவர்கள் முன்னோக்கி செல்லும் பொழுது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இருப்பதை பார்த்திருக்கிறோம். இதன் காரணமாகத்தான் அவரை கேப்டனாக கொண்டு வரவில்லை”
இதையும் படிங்க : நான் இந்திய அணியில் இருந்திருந்தா.. ஆஸியில் ஹாட்ரிக் அடிச்சிருப்போம்.. தப்பு பண்ணிட்டாங்க – புஜாரா வருத்தம்
“தற்பொழுது ரகானாவை புதிய கேப்டனாக கொண்டு வந்திருப்பது மிக உறுதியை கொடுக்கக் கூடிய ஒன்றாக எங்களுக்கு அமைந்திருக்கிறது. அவரின் மூலமாக எங்களுக்கு நிறைய முதிர்ச்சியும் அனுபவமும் கிடைக்க இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.