நான் இந்திய அணியில் இருந்திருந்தா.. ஆஸியில் ஹாட்ரிக் அடிச்சிருப்போம்.. தப்பு பண்ணிட்டாங்க – புஜாரா வருத்தம்

0
113
Pujara

நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் தன்னை தேர்வு செய்திருந்தால் நிச்சயமாக ஆஸ்திரேலியா மண்ணில் மூன்றாவது முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றிருக்கும் என
புஜாரா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

தற்போது புஜாரா சிவப்பு பந்தில் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி வருகிறார். மேலும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதன் காரணமாக ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்த துவங்க இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தான் இந்திய அணியில் இடம்பெற கடுமையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நான் திரும்பி வருவேன்

இந்தியாவில் ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும், நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் டெஸ்ட் தொடராக இந்திய அணிக்கு இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணம் அமைந்திருக்கிறது. இதை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. ஜூலை மாதத்தில் நடைபெறும் இந்த தொடருக்கு தான் இந்திய அணியில் தேர்வு பெற முடியும் என்று புஜாரா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து புஜாரா பேசும் பொழுது “நிச்சயமாக ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் இந்திய அணிக்காக எப்பொழுதும் விளையாட விரும்புகிறீர்கள். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப என்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். அணிக்கு நான் தேவைப்பட்டால் நிச்சயம் தயாராக இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் இந்திய அணிகள் வாய்ப்பு வந்தால் அதை இரண்டு கைகளிலும் பிடிக்க தயாராக இருக்கிறேன்”

- Advertisement -

நான் இருந்திருந்தால் வென்று இருப்போம்

“ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு என்னை தேர்வு செய்தார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். என்னை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்து இருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் டெஸ்ட் தொடர் வெற்றியை இந்திய அணி பெற்றிருக்கும் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க : விராட் இல்லை.. நீங்க நினைக்காத இவர்தான் இந்திய கிரிக்கெட்டின் மிஸ்டர் ஃபிக்ஸிட் – ஸ்டார்க் பேட்டி

“இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்வதற்கு நிறைய நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் தற்போது அந்த அணியில் ஆண்டர்சன் ஓய்வு பெற்று விட்டார். மேலும் இன்னொரு முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். தற்போது இங்கிலாந்து அணி கொஞ்சம் பலவீனமாகவே இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -