பிசிசிஐ இடம்கொடுத்தாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்காதீங்க; உள்ளூர் கிரிக்கெட் ஆடி நிரூபித்த பிறகு, மீண்டும் டீமுக்குள் ஆடட்டும் – கேஎல் ராகுல் மீது முன்னாள் வீரர் சாடல்!

0
469

இத்தனை வீரர்கள் நன்றாக விளையாடி வரும் பொழுது, எதற்காக கேஎல் ராகுல் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புகள் கொடுக்கிறீர்கள். முறையாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபித்த பிறகு மீண்டும் அணிக்குள் வரட்டும் என்று ட்வீட் மூலம் விமர்சித்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. மிகச் சிறப்பாக இந்திய அணி செயல்பட்டு வந்தாலும் துவக்க வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடி 20, 17 மற்றும் ஒரு ரன்கள் என மொத்தம் 38 ரன்கள் அடித்து மோசமான துவக்கத்தை கொடுத்திருக்கிறார். இருப்பினும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் எடுக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் கூறுகையில், கேஎல் ராகுல் திறமையான வீரர். இந்தியாவை விட வெளிநாடுகளில் நன்றாக விளையாடி இருக்கிறார். இந்தியாவில் விளையாடும் பொழுது கூடுதல் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பேசினார். இதனால்தான் அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகிறோம் என்றும் கூறினார்.

இந்நிலையில் கேஎல் ராகுலை தொடர்ந்து விமர்சித்து வரும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், ரோகித் சர்மா கூறியதற்கு புள்ளி விவரங்களுடன் சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

- Advertisement -

“கேஎல் ராகுல் வெளிநாடுகளில் நன்றாக விளையாடி வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் அவரது புள்ளிவிவரங்கள் அப்படியே தலைகீழாக கூறுகின்றன. வெளிநாடுகளில் இவரது டெஸ்ட் சராசரி 30 மட்டுமே. 6 சதங்கள் அடித்து இருந்தாலும் அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளார். இதனால் தான் குறைவான சராசரி வைத்திருக்கிறார். 56 இன்னிங்ஸ்களில் இப்படி குறைவான சராசரி வைத்திருப்பது சரியானதாக தெரியவில்லை.” என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும் மற்ற துவக்க வீரர்களான ஷிகர் தவான், மயங்க் அகர்வால், அஜிங்கியா ரஹானே மற்றும் சமீபத்தில் இந்திய அணியில் இணைந்த சுப்மன் கில் ஆகியோரின் ரன்கலுடன் ஒப்பிட்டும் பேசியுள்ளார்.

கடைசியாக அவர் பதிவிட்டதில், “ராகுல் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றிருக்கிறார். ஒருவேளை அவர் இருந்தால் இந்தூர் மைதானம் கம்பேக் கொடுப்பதற்கு மிகச்சிறந்த மைதானம். அப்படியே அதிலும் அவர் பிளேயிங் லெவனில் இல்லையென்றால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடி தன்னை நிரூபித்த பிறகு மீண்டும் அணிக்குள் வரவேண்டும்.” என்று நியாயமான முறையில் விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.