இந்தியா ஆஸி டெஸ்ட் மேட்ச்.. பாகிஸ்தான் கபடி ஆடறதுக்கு கூட சமமா வர முடியாது – பசித் அலி விமர்சனம்

0
390
Basit

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துவங்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்து ரிக்கி பாண்டிங் மற்றும் ரவி சாஸ்திரி வெளியிட்ட கருத்துக்களுக்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தத் தொடர் குறித்து பேசி இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியை ஆஸ்திரேலியா மூன்றுக்கு ஒன்று என வீழ்த்தும் என கூறியிருந்தார். தொடர் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதம் இருக்கும் பொழுதே ரிக்கி பாண்டிங் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியிருந்த இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என பதிலடி கொடுத்திருந்தார்.

ரிக்கி பாண்டிங் நேற்று பேசியது பற்றி கருத்து கூறியிருந்த பசித் அலி ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு எதிராக மைண்ட் கேம் விளையாடுகிறார் என விமர்சனம் செய்திருந்தார். இப்பொழுது ரவி சாஸ்திரி உள்ளே வந்து கருத்து கூறிய பிறகு அப்படியே பல்டி அடித்து வேறு ஒன்றை கூறியிருக்கிறார்.

பசித் அலி தற்பொழுது இந்த தொடர் குறித்து பேசும் பொழுது “ரிக்கி பாண்டிங் மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்து பரபரப்பை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஒரு பக்கம், மற்ற அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி எல்லாம் இன்னொரு பக்கம்தான். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இருக்கும் முக்கியத்துவம் ஆசஸ் தொடருக்கும் கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : தமிழக பாலாஜியை தாண்டி.. இந்திய பவுலிங் கோச்சாக மோர்னே மோர்கல் வந்தது எப்படி?.. வெளியான தகவல்கள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ராவை அர்ஷத் நதிம் வீழ்த்தினார். இல்லையென்றால் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கிடைத்திருக்கும். மேலும் இந்தியா பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் விளையாடாது என்கிறார்கள். அப்படி என்றால் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஈட்டி எறிதல், ஹாக்கி அல்லது கபடி போட்டிகளை நடத்துங்கள். அப்படி நடத்தப்படும் போட்டிகளுக்கு சமமாக கூட இந்தியா ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் போட்டி வராது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் கபடி போட்டியில் மோதிக்கொண்டால் கூட மைதானம் ரசிகர்களால் நிரம்பி இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.