அதிக பணம் கொடுத்தா.. எல்லா போட்டியிலும் அதிக ரன்கள் அடிக்கணும்னு அவசியம் இல்லை – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

0
120

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதில் கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் முக்கிய காரணமாக அமைந்த வெங்கடேஷ் ஐயர், தன்னை அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டது குறித்த சில முக்கிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

அதிக விலையால் அழுத்தமா

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு வாங்கியது. இவர் ஏற்கனவே கொல்கத்தா அணியில் விளையாடி இருந்தாலும் கடந்த ஆண்டு தனது திறமையை நிரூபித்த நிலையில், மற்ற அணிகள் இவரை வாங்கும் முயற்சியில் ஈடுபட கொல்கத்தா விடாப்பிடியாக அதிக விலை கொடுத்து இவரை வாங்கியது. இருப்பினும் கடந்த மூன்று ஆட்டங்களில் அவர் சிறப்பாக செயல்படாத நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெங்கடேஷ் அய்யர் மீண்டும் தனது அதிரடியை தொடர்ந்தார்.

29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட வெங்கடேஷ் ஐயர், 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 60 ரன்கள் குவித்து அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதால் தன் மீது எந்த வகையான அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்து வெங்கடேஷ் ஐயர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெங்கடேஷ் ஐயர் பேட்டி

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அழுத்தம் தளர்த்தப்பட்டதா? இல்லையா என்பதை இப்போது நீங்களே சொல்லுங்கள். உங்கள் விலை 20 லட்சமாக இருந்தாலும் சரி, அல்லது 20 கோடியாக இருந்தாலும் சரி இதனை நான் பலமுறை சொல்லி விட்டேன். எங்கள் அணியில் இளம் வீரர் ரகுவன்சி இருக்கிறார். அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அணியில் உங்கள் பங்கு என்ன என்பதை பணம் ஒருபோதும் வரையறுக்காது. எனது விலை மற்றும் அதிக எதிர்பார்ப்புகள் காரணமாக இந்த கேள்விகள் அடிக்கடி வருகிறது என்பது எனக்கு தெரியும்.

இதையும் படிங்க:ஜெர்சி சிவப்பில் இருந்து நீலத்திற்கு மாறும்.. ஆனா என் தரம் என்னைக்குமே மாறாது – முன்னாள் ஆர்சிபி வீரர் பேட்டி

நான் இந்த அணியின் ஒரு வீரர். எனவே அணியின் வெற்றிக்காக நான் பங்களிக்க விரும்புகிறேன். பல சூழ்நிலைகளில் என்னுடைய பங்கு ஒரு சில ஓவர்களை மட்டுமே சமாளிக்க வேண்டி இருக்கும். நான் அதிக ரன்கள் எடுக்காவிட்டாலும், சில ஓவர்களை சமாளித்தாலே எனது வேலை நிவர்த்தி செய்யப்பட்டு விடும். நான் அதிக சம்பளம் வாங்கும் நபராக இருப்பதால் எப்போதும் ரன்கள் எடுக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. ஒருவர் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றியதாகும்” என்று வெங்கடேஷ் ஐயர் கூறியிருக்கிறார்.

- Advertisement -