பிடித்த வீரர் யார்?.. சச்சின் விராட்டை நிராகரித்து.. வெங்கடேஷ் ஐயர் தேர்ந்தெடுத்த லெஜெண்ட்

0
347
Virat

தற்போது இந்திய வீரர்கள் பலர் இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்து கவுண்டி லங்காஷைர் அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் ஐயர் தனக்குப் பிடித்த வீரர் யார்? என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தற்போது வெங்கடேஷ் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் லங்காஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் துலீப் டிராபி விளையாடுவதற்காக தற்பொழுது திரும்பி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பிடித்த வீரர் யார்? என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

கவுன்டி கிரிக்கெட்டில் வெங்கடேஷ் ஐயர்

லங்காஷைர் அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் 5 போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் ஒரு போட்டியில் வெங்கடேஷ் ஐயர் விளையாடி இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்த முறை கவுன்டி கிரிக்கெட் சிறப்பானதாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கவுன்டி கிரிக்கெட்டில் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 15,4,9,15,25 என சொற்ப ரன்களே எடுத்து இருக்கிறார். மேலும் ஒரு முதல் தர போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் 4 மற்றும் 15 ரன்கள் எடுத்திருக்கிறார். இத்தோடு இவர் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இவருக்கு நல்ல முறையில் கவுன்டி சீசன் அமையவில்லை.

- Advertisement -

சச்சின் விராட் கோலி கிடையாது

இந்த நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் வெங்கடேஷ் ஐயரிடம் பிடித்த வீரர் யார்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு ஒரு வீரருடன் இன்னொரு வீரரை வைத்து கேள்வி தொடர்ந்து கொண்டே வந்தது. தன்னுடைய சக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரரான பில் சால்ட் கவுன்டி வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார் என்பதால் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் பில் சால்டை தேர்ந்தெடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முன்னாள் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் மற்றும் தோனி என்று வந்து நின்றது. வெங்கடேஷ் ஐயர் கொஞ்சமும் யோசிக்காமல் தோனி என்று பதிலளித்தார். இதற்கடுத்து தோனி உடன் விராட் கோலி வைக்கப்பட்டார். அப்பொழுதும் தோனி என்று வெங்கடேஷ் ஐயர் பதிலளித்தார்.

இதையும் படிங்க : ஐசிசி புதிய தலைவர் ஜெய் ஷா.. நேர்மையை நிரூபிக்க இத செஞ்சே ஆகணும் – யூனிஸ் கான் பேட்டி

இறுதியாக தோனியுடன் சச்சின் டெண்டுல்கர் பெயர் முன் வைக்கப்பட்டது. இதற்கு மட்டும் கொஞ்ச நேரம் வெங்கடேஷ் ஐயருக்கு நேரம் தேவைப்பட்டது. பின்பு உறுதியாக வெங்கடேஷ் ஐயர் தோனியை மீண்டும் தனக்கு பிடித்த வீரராக தேர்ந்தெடுத்தார். சச்சினை விடை பிடித்த வீரராக தோனி வெங்கடேஷ் ஐயர் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -