ஐசிசி புதிய தலைவர் ஜெய் ஷா.. நேர்மையை நிரூபிக்க இத செஞ்சே ஆகணும் – யூனிஸ் கான் பேட்டி

0
101
Younis

புதிய ஐசிசி தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சில நாட்கள் முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இந்த பொறுப்பில் நேர்மையாக செயல்படுவதை நிரூபிக்க ஒரு முக்கிய வேலையை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் கூறியிருக்கிறார்.

ஜெய் ஷா சில நாட்களுக்கு முன்பு ஐசிசி புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் இந்தியாவில் இருந்து ஐந்தாவதாக தேர்ந்தெடுக்கப்படும் ஐசிசி தலைவராக இருக்கிறார். மேலும் 2028 ஒலிம்பிக் வரையில் இவர் இந்த பதவியில் தன்னை நீடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சாதனை ஐசிசி தலைவர்

ஜெய் ஷா மிகக்குறைந்த வயதில் ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றி வளர்ப்பதற்கு மிகப்பெரிய முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார். இதற்கு கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மேலும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுகின்ற சூழ்நிலையில் இந்த பொறுப்புக்கு தான் வந்திருப்பதும், இதன் காரணமாக கிரிக்கெட்டை உலகெங்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு இருப்பதாகவும் பேசி இருக்கிறார். அவர் ஐசிசி அமைப்பின் தலைவராக உலக கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணிக்க தயார் என்று உறுதியளித்திருக்கிறார்.

- Advertisement -

யூனிஸ் கான் வேண்டுகோள்

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாடுவதை ஐசிசி அமைப்பின் தலைவராக ஜெய் ஷா உறுதி செய்ய வேண்டும் எனவும், அவர் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மேன் ஸ்பிரிட்டை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய சுற்றுப்பயணம்.. சிஎஸ்கே வீரரை பவுலிங் கோச் ஆக்கிய நியூசிலாந்து.. மாஸ் ஃபியூச்சர் பிளான்

இதுகுறித்து யூனிஸ் கான் பேசும்பொழுது “ஐசிசி தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டதன் மூலம் உலக கிரிக்கெட் உயர வேண்டும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட புதிய ஐசிசி தலைவர் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மேன் ஸ்பிரிட்டை வெளிப்படுத்த வேண்டும். மேலும் பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு சென்று விளையாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -