அகர்கர் வருண் சக்கரவர்த்திக்கு நீங்க இத செய்யலனா.. பெரிய தப்பா போயிடும் – தினேஷ் கார்த்திக் அறிவுரை

0
85
Dinesh

இந்திய டி20 அணியில் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய தேர்வுக்குழு செய்ய வேண்டியது குறித்து தமிழக மற்றும் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் வரும் சக்கரவர்த்தி தற்பொழுது இந்திய அணியில் தன்னுடைய மிஸ்டரி சுழல் பந்து வீச்சால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி எதிரணிகளுக்கு அச்சுறுத்தலை கொடுத்து கொண்டு வருகிறார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருடைய இடம் வலிமையாகிக் கொண்டே வருகிறது.

- Advertisement -

2021 முதல் 2024 வரை

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தியை 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்தார்கள். அவருக்கு அந்த உலகக்கோப்பை சரியாக செல்லாத காரணத்தினால் அத்துடன் அவருக்கு இந்திய அணியில் கதவுகள் மூடப்பட்டு விட்டது.

பிறகு வருண் சக்கரவர்த்தி ஐ பி எல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பொழுதும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் பந்துவீச்சை மாற்றி அமைத்து அசத்திய பொழுதும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் மிகவும் வருத்தத்துடன் இதை பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

திடீரென மாறிய காட்சிகள்

இப்படியான சூழ்நிலையில் திடீரென வருண் சக்கரவர்த்தி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். மூன்றாவது போட்டியில் விக்கெட் கிடைக்கவில்லை. தற்பொழுது தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக முதல் டி20-ல் 3 மற்றும் இரண்டாவது டி20-ல் 5 விக்கெட் என மொத்தம் ஐந்து டி20 போட்டிகளில் 13 விக்கெட் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட்.. ரோகித் ஆடலனா.. புது ஓபனர் புது கேப்டன் யார்? – கோச் கவுதம் கம்பீர் வெளிப்படையான பதில்

வருண் சக்கரவர்த்தி குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” இந்தியத் தேர்வுக்குழு அடுத்து வருகின்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்யவில்லை என்றால், அவர்கள் மிகப்பெரிய தவறு செய்கிறார்கள் என்று ஆகிவிடும். ஏனென்றால் வருண் சக்கரவர்த்தி தற்பொழுது சிறந்த பந்துவீச்சாளராக உருவாகி வருகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -