திடீரென திட்டத்தை மாற்றிய ரோகித் கம்பீர்.. ஸ்ரேயாஸ் கொடுத்த புது சிக்கல்.. வருணுக்கு வாய்ப்பு

0
296
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் திடீரென கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஒரு முக்கிய திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று அசாம் மாநிலம் கட்டாக் நகரில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடைபெறுகிறது. இன்று இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மீண்டும் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

திட்டத்தை மாற்றிய ரோகித் – கம்பீர்

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அதிரடியான ஒரு மாற்றமாக குல்தீப் யாதவ் இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக அறிமுகம் கொடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் முதல் போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வாால் வெளியேற விராட் கோலி மீண்டும் உள்ளே வந்திருக்கிறார்.

இந்தத் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை வெளியில் வைத்து ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் முடிவு செய்து இருந்தார்கள். இந்த நிலையில் விராட் கோலி காயம் அடைய ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். இந்த நிலையில் அவர் சிறப்பாக விளையாட தற்பொழுது ஜெய்ஸ்வால் வெளியேற்றப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்கிறார். கம்பீர் மற்றும் ரோகித் இருவரும் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ஜோஸ் பட்லர் புரியாத புதிர்

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இரண்டாவது பேட்டிங் செய்வதற்கு நல்ல முறையில் இருக்கும் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்து மீண்டும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இந்திய ஆடுகளத்தில் ஸ்பின்னர்களின் தேவை இருக்க இந்த போட்டியில் ஸ்பின் ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தேலை அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் அவர் என்னைவிட திறமையானவர்.. ஆனா யாருமே பாராட்டுவதில்ல – அஸ்வின் விமர்சனம்

இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல் மற்றும் பிரைடன் கார்ஸ் மூவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய இடத்தில் ஷாஹிப் மக்மத், ஜேமி ஓவர்டன் மற்றும் கஸ் அட்கின்சன் மூவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். முதல் போட்டியை இந்திய அணி வெற்றி இருக்க இந்த போட்டியை இங்கிலாந்து அணி தோற்றால் தொடரையும் இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -