இந்திய அணியில் ஒரு வீரரை குறிப்பிட்டு அவர் தன்னைவிட திறமையானவர் என்றும் ஆனால் அவர் சிறப்பாக செயல்படும் பொழுது அவரை ஊடகங்கள் பாராட்டுவதில்லை என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்ற பொழுது இந்தியாவில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடரின் பாதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வந்தார். இந்த நிலையில் இந்திய அணி குறித்து தற்போது மிகவும் வெளிப்படையான முறையில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கு நம்பிக்கை இல்லை
சாம்பியன் டிராபிக்கு இந்திய அணியை பிசிசிஐ அறிவித்த பொழுது அதில் கடைசி பெயராக ரவீந்திர ஜடேஜா பெயர் இருந்தது. மேலும் அவரைப் போலவே இடது கை சுழல் பந்துவீச்சாளராக இருக்கும் அக்சர் படேல் பெயர் மேலே இருந்தது. அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் முதல் 11 பேர் பிளேயிங் லெவன் போல காணப்பட்டார்கள்.
எனவே ரவீந்திர ஜடேஜாவுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என பல இந்திய முன்னாள் வீரர்களும் கணிப்பு செய்திருந்தார்கள். மேலும் இந்திய ரசிகர்கள் அக்சர் படேல் இருக்கும் பொழுது ரவீந்திர ஜடேஜா அணிக்குத் தேவையில்லை என்றும் கூறினார்கள். இந்த முறை அவரை அணியில் தேர்வு செய்ததில் பலருக்கும் பெரிய உடன்பாடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் என்னைவிட திறமையானவர்
தற்போது ஜடேஜா குறித்து பேசி இருக்கும் அஸ்வின் “ஜடேஜா என்னைவிட திறமையானவர். அவர் பிறவி விளையாட்டு வீரர். அவரது முக்கியமான விஷயம் அவரது உடல் தகுதியில் இருக்கிறது. அவருக்கு இயற்கையாகவே உடல் தகுதி இருக்கிறது. இந்த வயதில் கூட அவர் மிட் விக்கெட்டில் நின்று ஸ்கொயர் லெக் வரையில் ஓடி பீல்டிங் செய்ய முடியும். இதற்காக நான் ஆச்சரியப்பட மாட்டேன் அவருக்காக மகிழ்ச்சி அடைவேன்”
இதையும் படிங்க : வெறும் 17 ஓவர்.. அட்டகாசம் செய்த ஆஸி.. இலங்கை அணி சொந்த மண்ணில் ஒயிட் வாஷ்.. 2வது டெஸ்ட் முடிவு
“ஒரு வீரர் சிறப்பாக விளையாடும் பொழுது நமது ஊடகங்கள் அவரை பாராட்ட தவறி விடுகின்றன. அதே வீரர் தோற்கும் பொழுது வில்லனாக மாறி விடுகிறார். அவர் ஜோ ரூட்டை முதல் போட்டியில் அவுட் செய்தார். அவர் ஒரு ஜாக்பாட் ஜாங்கோ. அவர் களத்தில் இருக்கும் பொழுது +10 ஆக இருக்கிறார். மேலும் நன்றாக பந்து வீசுகிறார். அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்” என்று பாராட்டி இருக்கிறார்.