தற்போது இந்திய டி20 அணியின் தனது இடத்தை நிரந்தரமாக்குவதற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் சக்கரவர்த்தி சில முக்கியமான விஷயங்கள் குறித்து சென்னை டி20 போட்டிக்கு முன்பாக பேசியிருக்கிறார்.
இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணிக்காக முதல் முறையாக தன்னுடைய சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருண் சக்கரவர்த்தி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
வருண் சக்கரவர்த்திக்கு உருவாகும் ஆதரவு
இந்திய அணியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைத்தது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது இந்திய டி20 அணியில் குல்தீப் யாதவை தாண்டி தன்னுடைய இடத்தை நிரந்தரமாக்கக்கூடிய அளவில் இருப்பது அதைவிட பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் இந்திய டி20 அணியைத் தாண்டி சாம்பியன்ஸ் டிராபி இந்திய ஒருநாள் அணியிலும் அவருக்கு இடம் கொடுத்து இருக்க வேண்டும் என்ற ஆதரவு குரல்கள் எழுந்து வருகின்றன. மர்ம சுழல் பந்துவீச்சாளரான அவர் தன்னுடைய பந்துவீச்சை மேம்படுத்துவதற்கு பல வேலைகளை தொடர்ந்து செய்து சிறப்பான முறையில் காணப்படுகிறார்.
என்னை அவருடன் ஒப்பிடாதிர்கள்
இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி பேசும் பொழுது ” அஸ்வின் அவர்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி இருக்கிறார். நான் இப்பொழுது தான் இந்திய அணிக்கு திரும்பி வந்திருக்கிறேன். அவருடன் ஒப்பிடும் நிலையை நான் எட்ட கிடையாது. ஆனாலும் இந்திய அணியில் இடம் கிடைத்தவுடன் அனைவரும் நீண்ட காலம் விளையாடவே விரும்புகிறார்கள்”
“நான் எனது செயல்முறையை பின்பற்றுகிறேன். என்னுடைய கடின உழைப்பு என்னை எங்கு அழைத்துச் செல்லுமோ அங்கு அழைத்துச் செல்லட்டும். நான் ஒருவரின் காலணியை நிரப்புவது குறித்து யோசிக்கவில்லை. உண்மையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் காலணியை நிரப்புவது மிகப் பெரியது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். நான் அதன் அருகில் கூட இல்லை”
இதையும் படிங்க : ருதுராஜிக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது.. முக்கிய காரணம் இதுதான் – அஸ்வின் விளக்கம்
“நான் ஆரம்பத்தில் என் பந்துவீச்சில் திட்டங்கள் வைத்திருப்பேன். பிறகு பேட்ஸ்மேன்கள் ஏதாவது புதிதாக செய்ய பார்க்கிறார்களா? என்பது குறித்து பார்ப்பேன். அப்பொழுது நான் என்னுடைய உள்ளுணர்வின் அடிப்படையில் செல்வேன். அவர்கள் வேறு மாதிரி முயற்சி செய்யும் பொழுது நீங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில்தான் செல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.