ஸ்பெஷல் பந்து இருக்கு.. போன முறை விராட் கோலி தப்பிச்சிட்டார்.. இப்ப விடமாட்டேன் – வருண் சக்கரவர்த்தி பேட்டி

0
88
Varun

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன. இதில் விராட் கோலிக்கு எதிராக தான் சிறப்பான முறையில் விளையாட விரும்புவதாக வருண் சக்கரவர்த்தி கூறியிருக்கிறார்.

தற்போது கேகேஆர் அணியில் மிகவும் கவனிக்கப்படக்கூடிய வீரராகவும் முக்கிய வீரராகவும் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய மாயாஜால சுழல் பந்துவீச்சின் காரணமாக மாறி இருக்கிறார். மேலும் இந்த ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதற்கும் முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்.

- Advertisement -

மிஸ்டரி ஸ்பின்னின் தனித்தன்மை

வருண் சக்கரவர்த்தி வீசக்கூடிய பந்து உள்ளே வருகிறதா அல்லது வெளியே செல்கிறதா என்பது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சந்தேகத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் அவர் டாப் ஸ்பின் வீசுவதால் பந்தில் பவுன்ஸ் கொண்டு வர முடிகிறது. மேலும் அவரால் ஒரு ஸ்பின்னரை விட அதிகமான வேகத்தில் பந்தை வீச முடிகிறது.

இதன் காரணத்தால் வருண் சக்கரவர்த்தியை எதிர்த்து விளையாடுவது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கிறது. குறிப்பாக ரன் அடித்தாக வேண்டிய கட்டாயம் அதிகம் இருக்கின்ற டி20 கிரிக்கெட்டில் அவரை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடுவது கடினமானது. அப்படி அதிரடியாக விளையாடும் பொழுது விக்கெட் இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலி சிறப்பாக விளையாடினார்

இது குறித்து பேசி இருக்கும் வருண் சக்கரவர்த்தி கூறும் பொழுது “கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு நான் என்ன மாதிரி தயாரிப்பை செய்தேனோ அதே மாதிரியான தயாரிப்பை செய்திருக்கிறேன். கண்டிப்பாக விராட் கோலிக்கு எதிராக களம் இறங்குவதை நான் ரசிக்கிறேன். வெளிப்படையாக அவர் எனக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருக்கிறார். இந்த முறை நான் அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட விரும்புகிறேன்”

இதையும் படிங்க : ஸ்ட்ரைக் ரேட் விமர்சனம் தவறு.. ரோகித்தை காப்பாற்ற விராட் இருக்கிறார்.. ஆனால் கோலிக்கு யார் இருக்கா.? – ஆரோன் பிஞ்ச் பேட்டி

“நான் ஒவ்வொரு முறை உள்நாட்டு கிரிக்கெட் விளையாடும் பொழுதும் அங்கு புதிய முறையில் பந்து வீசுவதற்கு முயற்சி செய்கிறேன். இந்த முறையும் என்னிடம் அப்படியான புதிய பந்து இருக்கிறது. கடந்த ஆண்டு எனக்கு அது பலன் அளித்தது. முந்தைய ஆண்டுகளில் எனக்கு அவ்வாறு அமையவில்லை. எனவே இந்த முறை மீண்டும் எனது முயற்சியை நான் ஐபிஎல் தொடரில் செய்யப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -