18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்று முதல் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பிரின்ச் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் குறித்து பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டது. பொதுவாக 130 முதல் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலி பெங்களூர் அணியின் சூழ்நிலைக்கேற்ப தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி டி20 கிரிக்கெட்க்கு செட் ஆக மாட்டார் முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.
இருப்பினும் விராட் கோலி அதனை தன் பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்து அடுத்ததாக நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் முக்கிய பங்காற்றி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் இன்று பெங்களூர் அணிக்கு எதிராக முதல் போட்டி நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி ரோஹித் சர்மாவை போன்று பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து ஆர் ஒன் பின்ச் கூறும் போது “ரோஹித் அதிரடியாக விளையாடும்போது அவரை சுற்றி இருக்கும் வீரர்களை பாருங்கள். அவரைச் சுற்றி பேட்டிங் செய்யக்கூடிய அடித்தளத்தை அவர் கொண்டிருக்கிறார். கிரீஸில் இருந்து வெளியே நடந்து சென்று இடுப்பு அளவு வரும் பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சிப்பது பரவாயில்லை. ஆனால் அவரைச் சுற்றி நடக்க இயக்கவியலை புரிந்து கொள்ள வேண்டும். ரோஹித் அந்த முடிவை எடுக்கும் போது மூன்றாவது வீரராக விராட் கோலி அவருக்கு பின்னால் பேட்டிங் செய்ய தயாராக இருந்தார்.
இதையும் படிங்க:விராட் ரோஹித் இல்லை.. ஆரஞ்சு தொப்பியை இவர்தான் வாங்குவார்.. கோப்பை இந்த டீம்தான் வெல்லும் – ஷேவாக் ஆச்சரியம்
எனவே அவரது ஆட்ட விதம் நன்றாக தெரியும். ஏனென்றால் அவர் செய்யும் தவறுகளை சரி செய்ய பின்னால் ஒரு வீரன் இருக்கிறான் என்று அவருக்கு தெரியும். எனவே ரோகித் சர்மா அதனை செய்யும் போது வெற்றிகரமாக இருந்தார் என்பதை உணர்ந்தேன். ஒருவேளை விராட் ஸ்டிரைக் ரேட் 140 இல் இருந்து 150க்கு உயர்ந்தால் அவரால் அதை செய்ய முடியும். எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மற்றவர்கள் அனைவரும் சரியாக விளையாடாத போது ஆர்சிபி அணியை எத்தனை முறை அவர் குழியில் இருந்து எடுத்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.






