இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் வருண் சக்கரவர்த்தி குறித்து ரவீந்திர ஜடேஜா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஒருநாள் போட்டியில் அறிமுகம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் ஏற்கனவே முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள இங்கிலாந்து அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் குவித்துள்ளது.
இதில் தனது முதல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகிய வருண் சக்கரவர்த்தி, ஒரு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஏற்கனவே டி20 தொடரில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நிலையில் தற்போது ஒரு நாள் தொடரிலும் வாய்ப்பு பெற்றுள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா வருண் சக்கரவர்த்திக்கு இந்திய தொப்பியை வழங்கினார். மேலும் ஒரு நாள் தொடர் குறித்து ஜடேஜா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வருண் கேப் எண் 259. இது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு சிறப்பான நாளாகும். டென்னிஸ் பந்து கிரிக்கெட் முதல் டி20 கிரிக்கெட் வரை நாங்கள் அனைவரும் உங்கள் மாயாஜாலத்தை கண்டோம். இப்போது இந்த வடிவத்தில் உண்மையிலேயே சிறப்பானதை செய்ய வேண்டிய நேரம் இது. நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம். நீங்கள் தான் உங்களது 100 சதவீதம் நல்ல அதிர்ஷ்டம் என்று நினைத்து செயல்பட வேண்டும்” என்று ஜடேஜா கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:194 ரன் தேவை.. 4 விக்கெட்.. போராடிய சித்தார்த்.. கைவிட்ட சீனியர்கள்.. தமிழ்நாடு செமி பைனலுக்கு செல்லுமா?
தொப்பியை பெற்ற பிறகு வருண் கூறும் பொழுது “டி20 அறிமுகத்திலிருந்து ஒரு நீண்ட பயணமாக இருப்பதால் இப்போது இது எனக்கு நன்றாக உள்ளது. தற்போது எனக்கு ஒரு பெரிய திருப்புமுனை கிடைத்துள்ளது. மேலும் இது நிறைய உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிய பிறகு தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, நான் அதை நிச்சயமாக போற்றுவேன். இதை நான் நிச்சயமாக மதிக்கக்கூடிய நிலையில் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தற்போது இந்திய அணி விளையாடி வரும் நிலையில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.