194 ரன் தேவை.. 4 விக்கெட்.. போராடிய சித்தார்த்.. கைவிட்ட சீனியர்கள்.. தமிழ்நாடு செமி பைனலுக்கு செல்லுமா?

0
551
TN

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி காலிறுதி போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் தடுமாறி வருகிறது.

இரு அணிகளும் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிழக அணிக்கு சாய் சுதர்சன் மீண்டும் திரும்பி இருந்தார். அதே சமயத்தில் முன்னணி பேட்ஸ்மேன் பாபா இந்திரஜித் விளையாடாதது பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

கருண் நாயர் கலக்கல்

முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணிக்கு கர்நாடக மாநில அணியில் இருந்து வாரி வந்திருக்கும் கருண் நாயர் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 243 பந்துகளில் 18 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உடன் 122 ரன்கள் குவித்தார். இவர் மிடில் வரிசையில் நங்கூரமிட்டு நின்றது தமிழ்நாடு அணிக்கு பெரிய பிரச்சினையாக மாறியது.

இவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த தானேஷ் மலேவர் 119 பந்துகளில் 75 ரன்கள், ஹர்ஸ் துபே 132 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக விதர்பா அணி 121.1 ஓவரில் 353 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு அணியின் பந்துவீச்சில் விஜய் சங்கர் மற்றும் சோனு யாதவ் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

தமிழ்நாடு அணி தடுமாற்றம்

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய தமிழ்நாடு அணி 38 ரன்களுக்கு முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. நாராயணன் ஜெகதீசன் 22 மற்றும் விஜய் சங்கர் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : 40வது முறை.. வரலாறு படைத்த ரூட்டுக்கு.. ஜடேஜா செய்த சாதனை சம்பவம்.. பும்ரா உடன் இணைந்தார்

இதைத்தொடர்ந்து ஒரு முனையில் போராடிய ஆன்றே சித்தார்த் சிறப்பாக விளையாடி 89 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இன்று இரண்டாவது நாள் முடிவில் தமிழக அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்போது தமிழக அணியின் கையில் 4 விக்கெட் கைவசம் இருக்க 194 ரங்கள் பின்னிலையில் இருக்கிறது. இந்த காலிறுதியை வென்று தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வேண்டியது மிகவும் முக்கியம்.

- Advertisement -