நியூசி இந்தியாவுக்கு கொடுத்த செம சான்ஸ்.. கம்பீர் செய்த மாஸ் மூவ்.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி

0
445
Rohit

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பான நிகழ்வுகளை மேற்கொண்டு இருக்கிறது. மேலும் டாஸ் வென்ற நியூசிலாந்து இந்திய அணிக்கு சாதகமான விஷயத்தை செய்திருக்கிறது.

இந்தத் தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகள் தங்களுடைய பிரிவில் ஏற்கனவே செமி பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டன. இன்று நடைபெறும் போட்டி இரு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்தித்துக் கொண்டால் என்ன செய்யலாம்? என்பதற்கான பரிசோதனை முயற்சியாகவே அமைகிறது.

- Advertisement -

நியூசிலாந்து இந்தியாவுக்கு கொடுத்த சான்ஸ்

இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் இரண்டு போட்டியிலும் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் தோற்றார். இதன் காரணமாக இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் முதலில் பந்து வீசியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய தேவை இருந்தது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தோல்வி அடைந்தார். இருந்தபோதிலும் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி கூறியிருக்கிறார். இது இந்திய அணிக்கு சிறந்த வாய்ப்பாக மாறி இருக்கிறது. மேலும் கேப்டன் ரோகித் சர்மாவும் தாங்கள் டாஸ் வென்று இருந்தால் முதலில் பேட்டிங் செய்திருப்போம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் செய்த மாஸ் மூவ்

இந்திய அணி அடுத்து நாக் அவுட் சுற்றில் விளையாடும் பொழுது மிடில் ஓவர்களில் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு எதிரணிக்கு பழக்கம் இல்லாத வருண் சக்கரவர்த்தி தேவை என்கின்ற கருத்து இருந்து வந்தது. இந்த நிலையில் சரியான போட்டியில் கம்பீர் வருண் சக்கரவர்த்தியை களம் இறக்கி இருக்கிறார். ஆனால் ஜடேஜா அல்லது அக்சர் பட்டேலுக்கு ஓய்வு கொடுக்காமல், வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியா செஞ்ச அத நாங்க செய்யல.. என்னோட பெரிய கவலையே வேற – மெக்கலம் வேதனை

மேலும் இந்தியனியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் சரியாக விளையாட வந்திருப்பது நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் நடந்திருக்கும் விஷயங்கள் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. அடுத்து நியூசிலாந்து அணியில் கான்வே வெளியேற, டேரில் மிட்சல் உள்ளே வந்திருக்கிறார்.

- Advertisement -