தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடரின் முதல் சுற்றோடு தோல்வியடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியிருக்கிறது. இங்கிலாந்து அணியின் இந்த படுதோல்விக்கான காரணங்கள் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
கடைசியாக நடைபெற்ற மூன்று ஐசிசி வெள்ளைப் பந்து தொடர்களிலும் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வந்திருக்கிறது. இந்த முறையும் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோஸ் பட்லர் விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா செய்ததை செய்ய முடியவில்லை
இதுகுறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் கூறும்பொழுது ” இது போன்ற ஒரு தொடருக்கு இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் தயாராக இருந்தது. இந்திய அணி எங்களை மிகச் சாதாரணமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோற்கடித்தது. இது ஒரு மிகச்சிறந்த முன் தயாரிப்பாக இந்திய அணியிடம் தெரிந்தது”
“ஆனால் நாங்கள் இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கி இருந்தோம். மேலும் கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் எங்களால் அழுத்தத்தை தாங்கவே முடியவில்லை. மேலும் எங்கள் வீரர்களிடம் நம்பிக்கை குறைவாகிவிட்டது என்பதையும் பார்த்தோம். எனக்கு இரண்டு வாரம் நேரம் கொடுங்கள். நான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை சந்தித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசப்போகிறேன்”
என்னுடைய கவலையே இதுதான்
“எங்களுக்கு கோடை காலத்தில் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் நெகட்டிவான விஷயங்கள் எதுவும் அப்பொழுது எங்கள் அணியை பாதித்துவிடக்கூடாது. இதை உறுதி செய்வதை என்னுடைய முக்கிய கவலையாக இருக்கிறது. வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்து வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்”
இதையும் படிங்க : ஐபிஎல்-க்கு எந்த கிரிக்கெட் வாரியமும் வீரர்கள அனுப்பாதிங்க.. பிசிசிஐ இத முதல்ல செய்யட்டும் – இன்சமாம் விமர்சனம்
“மேலும் ஜோஸ் பட்லர் அணியின் மீதும் வீரர்களிடமும் எவ்வளவு சிறப்பாக இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் அந்த அளவிற்கு இருந்த காரணத்தினால் தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார். நாங்கள் இங்கிருந்து கடினமான பாடங்களை எடுத்துக்கொண்டு, இங்கிலாந்து கிரிக்கெட்டில் உள்ள திறமைகளை கருத்தில் வைத்து அடுத்த கட்ட வேலைகளை செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.