இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டி20 தொடரில் மெகா சாதனை ஒன்றை வருண் சக்கரவர்த்தி படைப்பதற்கு அவருக்கு இன்னும் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.
தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் மகாராஷ்டிரா புனே மைதானத்தில் நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
வருண் சக்கரவர்த்தியின் மறு எழுச்சி
2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் யுனைடெட் அரபு எமிரேடில் நடைபெற்ற பொழுது இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அப்பொழுது இந்திய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறி வந்தது. இதன் காரணமாக அவருக்கு ஒரே தொடருடன் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு மூன்று வருடங்கள் கழித்து வருண் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். இந்த முறை அவர் பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் அவரை சிறப்பான நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. தற்பொழுது இந்திய டி20 அணியில் பும்ரா இல்லாத நிலையில் இவரே மிகவும் முக்கியமான பந்துவீச்சாளராக இருக்கிறார்.
படைக்க இருக்கும் மெகா சாதனை
தற்போது வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ஒரு ஐந்து விக்கெட் உட்பட மொத்தம் 10 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இன்றும் மூன்று விக்கெட்டுகள் அவர் இந்த தொடரில் கைப்பற்றினால், இரு நாடுகளுக்கு இடையே ஆன டி20 தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.
மேலும் தற்போது இந்த சாதனை வரும் சக்கரவர்த்தியிடம் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த தென் ஆப்பிரிக்க டி20 சுற்றுப்பயணத்தில் நான்கு போட்டிகளில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இந்த வகையில் தன் சொந்த சாதனையை தானே உடைப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பில் அவர் வந்திருக்கிறார்.
இதையும் படிங்க : பிசிசிஐ அவரை புறக்கணிக்காதிங்க.. அந்த பையன் கேப்டன் மெட்டீரியல் – தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
இரு நாடுகளுக்கு இடையேயான டி20 தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர்கள் :
வருண் சக்கரவர்த்தி: 12 (இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20, 2024)
வருண் சக்ரவர்த்தி: 10* (இந்தியா – இங்கிலாந்து டி20, 2025)
ரவிச்சந்திரன் அஸ்வின்: 9 (இந்தியா – இலங்கை, 2016)
ரவி பிஷ்னோய்: 9 (இந்தியா – ஆஸ்திரேலியா, 2023)
தீபக் சாஹர்: 8 (இந்தியா – பங்களாதேஷ், 2019)






