பிசிசிஐ அவரை புறக்கணிக்காதிங்க.. அந்த பையன் கேப்டன் மெட்டீரியல் – தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்

0
94
Dinesh

இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வரும் இரண்டு இளம் வீரர்களான திலக் வர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து மிகவும் பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெற்றார். இருந்தபோதிலும் தற்பொழுது அவர் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த நிலையில் அங்கிருந்து அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இந்த இரண்டு இளம் வீரர்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

திலக் வர்மா – ஸ்ரேயாஸ் ஐயர் பலம்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மண்ணில் டி20 தொடரில் திலக் வர்மா தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சென்னையில் 55 பந்தில் ஆட்டம் இழக்காமல் 72 ரன்கள் எடுத்து பொறுப்பான முறையில் பேட்டிங் செய்து இந்திய அணியை கடினமான நேரத்தில் வெற்றி பெற வைத்தார்.

இன்னொரு பக்கத்தில் கேப்டனாக 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர், மும்பை மாநில கேப்டனாக சையத் முஸ்தாக் அலி தொடராகிய அவற்றை ஸ்ரேயாஸ் ஐயர் வென்றிருக்கிறார். மேலும் இவர் தற்பொழுது இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணிகளில் இடம்பெற்றும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர் ஒரு கேப்டன் மெட்டீரியல்

இவர்கள் இருவர் குறித்தும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “திலக் வர்மா சென்னையில் விளையாடியது மிகவும் புத்திசாலித்தனமான இன்னிங்ஸ். சூழ்நிலையை புரிந்து கொண்டு மிகவும் அற்புதமாக அவர் விளையாடினார். அவர் வலிமையில் இருந்து இன்னும் பலம் பெற வேண்டும். அவர் எங்களுடைய ஆர்சிபி அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படட்டும். பொதுவாகவே எங்கள் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார்”

இதையும் படிங்க : ஆஸியில் ஆகாஷ் தீப்பின் அருமையான பவுலிங்கை.. விராட் கோலி கெடுத்தார் – அஸ்வின் வெளியிட்ட தகவல்

“ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதாக கவனிக்கப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் தொடர்ந்து பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்றால், அவர்தான் கேப்டனாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அவர் 100% கேப்டன்சி மெட்டீரியல் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. தற்போது அவர் இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவரை பிசிசிஐ புறக்கணிக்காமல் இருக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -