எனக்கு இந்த போட்டியில கொடுக்கப்பட்ட வேலை இதுதான்.. இந்த 3 பேருக்கு விருதை சமர்ப்பிக்கிறேன் – வருண் சக்கரவர்த்தி பேச்சு

0
73
Varun

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு கொடுக்கப்பட்டது. அவர் இந்த போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இந்தப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 53 ரன்கள் கொடுத்தார். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் முதல் விக்கெட்டை எடுத்தார். மேலும் இரண்டாவது ஸ்பெல்லில் மேலும் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

- Advertisement -

எனக்கு கொடுக்கப்பட்ட வேலை

இந்தத் தொடரில் மொத்தமாக வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் இதற்கு முன்பாக இரண்டு டி20 தொடர்களில் இதே போல 10 விக்கெட்டுகள் தாண்டி வீழ்த்தி இருக்கிறார். இதைச் செய்த ஒரே வீரராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி மட்டுமே இருக்கிறார். மேலும் அவருக்கே தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேசி உள்ள வருண் சக்கரவர்த்தி கூறும் பொழுது “இது மிகவும் அதிதீவிரமான போட்டியாக இருந்தது. இந்தத் தொடரிலேயே இந்த போட்டி மிகவும் சிறந்ததாக இருக்கலாம். எனக்கு கொடுக்கப்பட்ட ரோல் என்னவென்றால் நான் விக்கெட் எடுக்க வேண்டும். இதனால் நான் கையில் பந்தை எடுக்கும் போதெல்லாம் தாக்குதல் முறையில் ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க முயற்சி செய்தேன்”

- Advertisement -

இவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

“நான் சூர்யா, சஞ்சு மற்றும் அணியில் உள்ள எல்லோருடனும் பேசிக்கொண்டே இருப்பேன். அவர்கள் எப்போதும் என்னை ஊக்குவித்துக் கொண்டே இருப்பார்கள். அது எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது. மற்றவர்களை விட தனித்துவமான விஷயம் என்னிடம் என்னவென்றால், நான் ஏதாவது புதிதாக கற்றுக் கொண்டே இருப்பேன். ஒருவேளை அது வேலை செய்யவில்லை என்றால் நான் மீண்டும் அதில் வேலை செய்து சிறப்பாக திரும்பி வர முயற்சி செய்வேன்”

இதையும் படிங்க : பும்ரா ஒரு பேங்க் மாதிரி.. மற்ற பவுலர்ஸ்க்கும் அவருக்கும் இந்த ஒரு விஷயம் தான் வித்தியாசம் – இர்பான் பதான் பேட்டி

” மேலும் என்னுடைய இந்த வெற்றியை என்னுடைய அம்மா, அப்பா மற்றும் என்னுடைய சகோதரிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். வருகின்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை வருண் சக்கரவர்த்தி ஏற்படுத்துவார் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -