நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் பும்ராவின் முக்கியத்துவம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி மற்றும் ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதில் திலக் வர்மா 73 ரன் மற்றும் ஹர்திக் பாண்டியா 63 ரன்கள் குவித்தனர்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 35 பந்துகளில் 65 ரன்கள் குவித்து விளையாடிக் கொண்டிருந்தபோதும் பும்ராவின் சிறப்பான பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் அவர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பது குறித்து இர்பான் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கி கொடுத்து கொண்டிருந்தபோது பும்ரா தனது முதல் இரண்டு ஓவர்களில் எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவர் ஆட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி ஒரு வேகத்தடை போல செயல்படுகிறார். அவர் எந்த ஒரு கேப்டனுக்கும் நம்பகமானவர். அவர் மீது எந்த தயக்கமும் இன்றி முதலீடு செய்யலாம். நீங்கள் அப்படி முதலீடு செய்தால் அந்த நான்கு ஓவர்களும் வங்கியில் பாதுகாப்பாக இருப்பது போல இருக்கும்.
இதையும் படிங்க:நல்ல பார்ம்ல இருந்தும்.. நான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு இதான் காரணம் – இஷான் கிஷான் ஓபன் டாக்
சுமார் பதினோராவது ஓவரில் டி காக் சிறப்பான ஃபார்மில் இருந்தார். மேலும் இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியின் வேகமும் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் டிகாக்கை பும்ரா ஆட்டமிழக்க செய்து தனது முக்கியத்துவத்தை நிரூபித்தார். அவர் மெதுவான பந்துகளை அதிகம் பயன்படுத்தினார். இந்த வெற்றிக்கு தான் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர் நிரூபித்தார். எனவே எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் அவர் எந்த மாதிரியான பந்தை வீசப் போகிறார் என்று யோசிக்க முடியவில்லை” என்று பேசியிருக்கிறார்.






