கம்பீர் நிச்சயம் ஆர்சிபியை பைனல்ல விரும்ப மாட்டார்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – வருண் ஆரோன் பேட்டி

0
139
Gambhir

நடப்பு 2024 ஐபிஎல் தொடர் ஆர்சிபி அணியின் தொடர் வெற்றிகளுக்காகவே ஞாபகம் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்த இரு அணிகளையும் இணைத்து மிக முக்கியமான கருத்து ஒன்றை வருண் ஆரோன் கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கம்பீர் கொல்கத்தா அணியின் மென்டராக வந்த பிறகு அந்த அணியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியிருக்கிறது. அவர்கள் துவக்கத்தில் இருந்து ஆரம்பம் வரை அதிரடியாக விளையாடுகிறார்கள். ஆனால் அவர்கள் அதையே சரியான திட்டத்துடனும் நம்பிக்கையுடனும் விளையாடுகிறார்கள். அதிரடியாக மட்டுமே விளையாடுவது அவர்களது நோக்கமாக இல்லை.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அவர்கள் ஒன்பது போட்டிகளில் விளையாடி 18 புள்ளிகள் எடுத்தார்கள். மேலும் அவர்களுடைய கடைசி இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டது. இதோடு சேர்த்து 20 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்கள். தற்போது முதல் தகுதி சுற்றுப்போட்டியில் ஹைதராபாத் அணியை வென்று இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் ஆர்சிபி அணி கடைசி ஆறு போட்டிகளை வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்ற நிலையில், 6 போட்டிகளையும் வென்று ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து மிகப்பெரிய நம்பிக்கையான மனநிலையில் இருக்கிறார்கள். எனவே அணியாக இணைந்து நம்பிக்கை உடன் விளையாடும் இவர்களை ஆபத்தான அணியாக எல்லோரும் கருதுகிறார்கள்.

இந்த நிலையில் வருண் ஆரோன் ஆர்சிபி அணி பற்றி கூறும் பொழுது “நிச்சயமாக பேப்பரில் எல்லோருக்கும் பிடித்த அணியாக கொல்கத்தா அணி இருக்கும். ஆனால் போட்டியின் முடிவு என்பது குறிப்பிட்ட நாளின் செயல்பாட்டில்தான் அமைகிறது. அந்த நேரத்தில் உங்கள் அணி சிறந்ததா சிறந்தது இல்லையா என்பது முக்கியம் கிடையாது. எனவே நிச்சயம் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை கொல்கத்தா அணி விரும்பாது. ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் அவர்கள் கோப்பையை வெல்வதை யாரும் தடுக்க முடியாது என்கின்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னுடைய கேப்டன் சுரேஷ் ரெய்னா.. எனக்காக அந்த வாய்ப்பை வாங்கி தந்தவர் அவர்தான் – விராட் கோலி பேச்சு

இன்னும் முக்கியமான போட்டிகள் எஞ்சி இருக்கின்றன ஆனால் இறுதிப் போட்டியின் அழுத்தம் என்பது வேறானது. ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு வருவதை கொல்கத்தா அணி விரும்பவில்லை. ஏனென்றால் கோப்பையை வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கையோடு வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.